திரைப்படம் ஆகும் கக்கன் வாழ்க்கை வரலாறு.. ட்ரெய்லரை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: எளிமைக்குப் பெயர்போன மூத்த அரசியல்வாதியும் சுதந்திர போராட்ட வீரருமான கக்கனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று இசை மற்றும் டடிரெய்லரை வெளியிட்டார்.
சுதந்திரப் போராட்ட வீரரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கக்கனின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது. பொது வாழ்வில் எளிமையையும், நேர்மையையும் தனது வாழ்நாளின் கடைசி மூச்சு வரை கடைபிடித்த அரசியல் தலைவர் கக்கன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர் கக்கன். மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் நேரு ஆட்சி காலத்தில் 1952 முதல் 1957 வரை எம்.பி.யாக இருந்தார் கக்கன். கக்கன் தமிழ்நாட்டில் காமராஜர், பக்தவச்சலம் ஆட்சி காலத்தில் அமைச்சராகவும் இருந்துள்ளார்.
எளிமைக்கும், நேர்மைக்கும் பெயர் போன கக்கனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தை பிரபு மாணிக்கம் என்பவர் இயக்கி வருகிறார். சங்கர் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் "கக்கன்" திரைப்படத்தை தயாரித்துள்ளது. தேவா இசை அமைக்கும் இந்த படத்திற்கு வெங்கி ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்றுள்ளது. கக்கன் பிறந்த ஊரான மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டியிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று 'கக்கன்' படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் டிரெய்லர் மற்றும் பாடல்களை வெளியிட்டார்.
இந்த விழாவில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் நிர்வாகிகள் ஈவிகேஸ் இளங்கோவன், கோபண்ணா, ஹசன் மௌலானா, அமைச்சர்கள் துரைமுருகன், சாமிநாதன், தியாகி கக்கனின் மகள் கஸ்தூரி பாய், சேலம் சரக காவல்துறை துணைத்தலைவர் எஸ்.ராஜேஸ்வரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications