இனி நல்ல எதிர்க்கட்சியாக இருக்க பாஜகவுக்கு வாழ்த்துகள்.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கிண்டல் பதில்
சென்னை: மத்தியில் வருங்காலத்தில் நல்ல எதிர்க்கட்சியாக பாஜக இருக்க வாழ்த்துக்கள் என முதல்வர் ஸ்டாலின் கிண்டலாக தெரிவித்துள்ளார்.
நெல்லையில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

அவர் ஆற்றிய உரை பின்வருமாறு: பாஜக தான் தமிழகத்தை சரியான பாதையில் கொண்டு செல்லக் கூடிய கட்சி ஆகும். தமிழக மக்கள் பாஜகவின் பின்னே வர தொடங்கியுள்ளனர். பாஜக ஆட்சியில் தமிழகம் டெல்லிக்கு மிக அருகே வந்திருக்கிறது.
திமுகவும், காங்கிரஸும் அப்புறப்படுத்தப்பட வேண்டிய கட்சிகள். திமுகவை இனி தேடினாலும் கிடைக்காது. தமிழகத்தில் அண்ணாமலை வந்துவிட்டதால் இனி திமுக காணாமல் போகும். தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று அண்ணாமலைதான். எம்ஜிஆர் போன்ற தலைவர்கள் வளர்ச்சிக்கான பாதையை வகுத்தார்கள். ஆனால் தங்கள் வாரிசுகளை முன்னிலைப்படுத்துவதையே சிலர் நோக்கமாக கொண்டிருந்தார்கள்.
தமிழகத்தில் இருந்தே திமுக அகற்றப்பட வேண்டிய கட்சி. தமிழகத்தின் வளர்ச்சிக்காக என்ன செய்ய போகிறார்கள் என திமுகவிடம் கேட்டால் பதில் இருக்காது. வாரிசுகளுக்காக அவர்கள் இருக்கிறார்கள். உங்களுக்காக நான் இருக்கிறேன். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி திமுகவும் காங்கிரஸும் சம்பாதிக்க நினைக்கிறார்கள். சுயநலமிக்கவர்களை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள்.
குடும்ப அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய விடாமல் மாநில அரசு தடுக்கிறது என்றும் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இந்த நிலையில் பிரதமரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாள் செய்தி மடலில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: தமிழகத்துக்கு அடிக்கடி வரத் தொடங்கி இருக்கிறார் பிரதமர் மோடி. தோல்வி பயம் அவர் முகத்தில் தெரிகிறது. அந்தக் கோபத்தைத்தான் அவரது முகம் காட்டுகிறது. திமுகவைப் பற்றியும், திமுக அரசைப் பற்றியும் அவதூறுகளை அள்ளி வீசி இருக்கிறார் பிரதமர். அவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு நாம் தடை போடுகிறோமாம். எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தார், எதற்கு நாம் தடையாக எப்படி இருந்தோம் என்று பட்டியல் போட்டிருந்தால் பதில் சொல்ல வசதியாக இருக்கும்.
எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டித் திறப்பதற்குத் தடையாக இருந்தோமா? மெட்ரோ ரயில் திட்டங்களுக்குத் தடையாக இருந்தோமா? மத்திய அரசின் எந்தத் திட்டங்களுக்கு நிலம் ஒதுக்காமல் இருந்தோம் என்பதைச் சொல்லட்டும். பொத்தாம் பொதுவாகக் குற்றம் சாட்டுகிறார் பிரதமர்.
திமுகவை ஒழித்து விடுவேன், இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்று, தான் வகிக்கும் பதவியைத் தாழ்த்தும் வகையில் பேசி இருக்கிறார் பிரதமர். திமுகவை அழிப்பேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் தமிழ்நாட்டு அரசியல் வரலாறு. அவரது பாணியில் பாஜகவே இருக்காது என நான் சொல்ல மாட்டேன். எங்களைத் தலைவர் கருணாநிதி அப்படி வளர்க்கவில்லை. ஜனநாயகக் களத்தில் நின்று ஒரு கட்சி எப்படிச் செயல்பட வேண்டுமோ அப்படிச் செயல்படும் உரிமை பாஜகவுக்கு உண்டு. கடந்த காலத்தில் நல்ல ஆளும் கட்சியாக இருக்கத் தெரியாத பாஜக, வருங்காலத்தில் நல்ல எதிர்க்கட்சியாகவாவது இருக்கட்டும் என நான் வாழ்த்துகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications