வெளிநாட்டு பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்! திமுகவினர் உற்சாக வரவேற்பு
சென்னை: தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றிருந்தார். ஜெர்மனி மற்றும் பிரிட்டன் நாடுகளுக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்குப் பல்வேறு நிறுவன நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசியிருந்தார். இதற்கிடையே தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார். அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
தமிழகத்தை ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. இதற்குத் தேவையான பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. பல தரப்பு முதலீடுகளைப் பெற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் இதற்காகவே முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடத்தப்படுகிறது.

மற்றொரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்து வருகிறார். ஏற்கனவே அவர் மத்தியக் கிழக்கு நாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்திருந்தார். இதற்கிடையே இப்போது அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்கச் சென்றிருக்கிறார். கடந்த 30ம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஐரோப்பிய நாடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

முதலில் ஜெர்மனியிலும், பின்னர் பிரிட்டன் நாட்டிற்கும் முதல்வர் ஸ்டாலின் சென்றார். அங்கு முக்கிய பிரமுகர்கள், கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், முதலீட்டாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரையும் முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும், தமிழகத்தில் முதலீடு செய்யும்படியும் அவர் அழைப்பு விடுத்தார். முதல்வர் ஸ்டாலினின் இந்தப் பயணத்தில் தமிழகத் தொழில் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜாவும் அதிகாரிகள் குழுவும் உடன் சென்றனர்.
மேலும், முதலீடுகளை ஈர்ப்பதைத் தாண்டியும் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். குறிப்பாகப் பிரிட்டனில் இருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் போட்டோவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், ஜி.யு.போப், கார்ல் மார்க்ஸ் நினைவிடங்களிலும் அவர் மரியாதை செலுத்தினார். அங்குள்ள தமிழ் சமூகத்தினரையும் சந்தித்துப் பேசினார்.
தாயகம் திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு#Chennai #CMMKSTalin #DMK #MKStalin #TamilNews #NewsTamil #NewsTamil24x7 pic.twitter.com/Pb8ZdLuvI0
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) September 8, 2025
இப்படிக் கடந்த 8 நாட்களில் முதல்வர் ஸ்டாலின் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். இதற்கிடையே 8 நாட்களுக்குப் பிறகு ஸ்டாலின் இன்று தாயகம் திரும்புகிறார். இதற்காக நேற்று பிற்பகல் முதல்வர் ஸ்டாலின் லண்டனில் இருந்து புறப்பட்டார். இன்று காலை 8 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் சென்னை வந்தடைந்தார். மூத்த அமைச்சர்கள், திமுக தலைவர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்
-
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
தூத்துக்குடி ரூ.18000 கோடி கப்பல் முதலீடு ஆந்திராவுக்கு கைநழுவியது ஏன்? வெள்ளை அறிக்கை தேவை: ராமதாஸ் -
தங்கம் வாங்கி வச்சு இருக்கீங்களா? அடுத்த 1 வருடத்தில் நடக்க போகும் சம்பவம்! ராக்பெல்லர் ஷாக் கணிப்பு












Click it and Unblock the Notifications