முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா.. சென்னையில் இன்று கூடும் அரசியல் தலைவர்கள்.. திரும்பும் பாஜக!
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி இன்று சென்னையில் திமுக சார்பில் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கான பொதுக்கூட்டத்தில் பிற அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
சென்னை: தமிழ்நாடு முதல் அமைச்சர் முக ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி சென்னை நந்தனத்தில் இன்று மாலை ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்பட பிற அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என கூறப்பட்டு வரும் நிலையில் இந்த நிகழ்வு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு முதல்வராகவும், திமுக தலைவராகவும் இருக்கும் முக ஸ்டாலின் இன்று 70வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். இவரது பிறந்தநாளை திமுக நிர்வாகிகள் சில நாட்களுக்கு முன்பிருந்தே கொண்டாட தொடங்கி உள்ளனர்.
முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அவர் கொண்டாடும் 2வது பிறந்தநாள் இதுவாகும். இவரது பிறந்தநாளையொட்டி இன்று தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட திமுகவினர் முடிவு செய்துள்ளனர்.

பாஜகவுக்கு எதிரான அணி
இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவையொட்டி தேசிய அளவில் எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிணைத்து பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த பல்வேறு தலைவர்கள் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் அமைய வேண்டும் என திட்டமிடப்பட்டது. அதன்படி இன்று சென்னை நந்தனத்தில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திமுக பொதுக்கூட்டம்
இதுதொடர்பாக ஏற்கனவே திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து இருந்தார். அதில், முக ஸ்டாலின் மார்ச் 1ம் நாள் 70வது பிறந்தநாள் கொண்டாட உள்ளார். இளைஞரணியை உருவாக்கிய காலத்தில் அதன் ஏற்றமிகு செயலாளராக வளர்ந்தார். துணைபொது செயலாளராக- பொருளாளராக - செயல் தலைவராக உயர்ந்து இன்று கழகத்தின் தன்னிகரில்லா தலைவராகச் செயல்பட்டு வருகிறார். எம்எல்ஏ, அமைச்சர், துணை முதல்வர் வரிசையில் முதல்வராக செயல்பட்டு வருகிறார்'' என புகழாரம் சூடியிருந்தார். மேலும், தலைமை கழகத்தின் சார்பில் மார்ச் 1ம் தேதி 5 மணிக்கு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் முக ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட இருக்கிறது என தெரிவித்து இருந்தார்.

கார்கே, அகிலேஷ் யாதவ் பங்கேற்பு
அதன்படி அங்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவரும் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பீகார் மாநில துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டவர்கள் வந்து பங்கேற்க உள்ளனர்.

உற்றுநோக்கும் பாஜக
மேலும் இந்த விழாவில் பங்கேற்க தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருந்து ஏராளமான திமுகவினர் சென்னைக்கு படையெடுத்துள்ளனர். மேலும் இதில் பாஜகவுக்கு எதிரான சித்தாந்தங்கள் கொண்ட அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளதால் இது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளதோடு, பாஜகவும் உற்று நோக்க தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications