என் தந்தைக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் இவர் தான்.. தோனியால் பூரித்து ஸ்டாலின் சொன்ன வார்த்தை! அடடே

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்ட புதிய ஸ்டாண்டிற்கு மறைந்த முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் புனரமைக்கப்பட்ட நிலையில் அதனை நேற்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டாண்ட்டையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் கருணாநிதிக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி தான் எனக்கூறிய முதல்வர் ஸ்டாலின் அவர் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற மற்றும் பழமை வாய்ந்த கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாக சென்னை சேப்பாக்கம் உள்ளது. இந்நிலையில் ரூ.139 கோடி செலவில் மைதானம் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 2011ல் ரூ.190 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் நடந்த நிலையில் அப்போது புதுப்பிக்கப்படாத பகுதிகள் ரூ.139 கோடியில் புனரமைக்கப்பட்டது.

புதிய ஸ்டாண்ட்

புதிய ஸ்டாண்ட்

இங்குள்ள அண்ணா பெவிலியனை மறைந்த முதல்வர் கருணாநிதி தான் திறந்து வைத்தார். தற்போது அண்ணா பெவிலியன் மற்றும் எம்சிசி பெவிலியன்கள் புனரமைக்கப்பட்டது. மேலும் புதிதாக ஸ்டான்ட் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. புதிய கேலரிக்கு மறைந்த முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் புனரமைக்கப்பட்ட மைதான திறப்பு விழா இன்று நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று திறந்து வைத்தார்.

கருணாநிதி ஸ்டாண்ட் திறப்பு

கருணாநிதி ஸ்டாண்ட் திறப்பு

மேலும் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்ட ஸ்டாண்ட் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி, சிஎஸ்கே முன்னாள் வீரர் பிராவோ, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் சிகாமணி, சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

பூரித்துபோன முதல்வர் ஸ்டாலின்

பூரித்துபோன முதல்வர் ஸ்டாலின்


இதன்மூலம் தற்போது 5000 கூடுதல் இருக்கைகள் ரசிகர்களுக்கு கிடைக்க உள்ளது. இந்நிலையில் தான் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு கருணாநிதியின் பெயரில் ஸ்டாண்ட் திறக்கப்பட்டது பற்றியும், எம்எஸ் தோனி பற்றியும் பூரிப்பாக கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பா அவர் தனது ட்விட்டரில் போட்டோக்களுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ட்விட்டரில் இருப்பது என்ன?

ட்விட்டரில் இருப்பது என்ன?


இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛கலைஞருக்கு பிடித்த கிரிக்கெட் வீரரான தோனி மற்றும் சீனிவாசன் முன்னிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் அவரது பெயரிலான ஸ்டாண்ட்-ஐ திறந்து வைத்ததில் பெருமை. கிரிக்கெட்டின் தீவிர ரசிகராக இருந்த எங்கள் காவிய தலைவருக்கு தகுந்த அஞ்சலியாக இதை கருதுகிறேன்'' என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+