சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக அரசுக்கு இயற்கையும் ஒத்துழைப்பு தருகிறது பாருங்க.. முதல்வர் ஸ்டாலின் பூரிப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: திமுக அரசுக்கு இயற்கையும் ஒத்துழைப்பு நல்கி வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.

கிராமங்கள் தன்னிறைவு அடைந்தால் நகரத்தினை நோக்கி கிராம மக்கள் இடம்பெயர்வது தடுக்கப்படும் என அவர் கூறியிருக்கிறார்.

தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாய் உணவை டேஸ்ட் பார்த்து சொன்னால் ரூ.5 லட்சம்.. சோறு போட்டு கை நிறைய சம்பளமும் கொடுக்கும் நிறுவனம்!நாய் உணவை டேஸ்ட் பார்த்து சொன்னால் ரூ.5 லட்சம்.. சோறு போட்டு கை நிறைய சம்பளமும் கொடுக்கும் நிறுவனம்!

மேலும் அவர் அந்த நிகழ்ச்சியில் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;

இயற்கை ஒத்துழைப்பு

இயற்கை ஒத்துழைப்பு


உழவர்களின் நலனை முன்னிலைப்படுத்தும் நம்முடைய அரசுக்கு இயற்கையும், நல்ல ஒத்துழைப்பை நல்குவதால், குறுவை சாகுபடிக்கு இந்த ஆண்டு மே 24-ஆம் தேதி
அதாவது நாளையதினம், மேட்டூர் அணையினை திறந்து வைக்க இருக்கிறேன், அந்தச் செய்தியையும் நான் இப்போது மகிழ்ச்சியுடன் உங்களோடு நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

7 அம்ச திட்டங்கள்

7 அம்ச திட்டங்கள்

நான் தமிழ்நாடு வளர்ச்சிக்காக ஏழு அம்ச தொலைநோக்குத் திட்டங்களை வகுத்துக்
கொடுத்திருக்கிறேன். இந்த ஏழு அம்ச தொலைநோக்குத் திட்டங்களில் ஒன்றானகலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் வகுக்கப்பட்டது. ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியையும் தன்னிறைவான
கிராமத்தையும் உருவாக்குவது இந்தத் திட்டத்தினுடைய முக்கிய நோக்கமாக அமைந்திருக்கிறது.

12,525 கிராம பஞ்சாயத்துகள்

12,525 கிராம பஞ்சாயத்துகள்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது, தமிழ்நாட்டிலுள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளில் 5 ஆண்டுகளில் அதை
செயல்படுத்த இருக்கிறோம். இந்தத் திட்டமானது ஊரக வளர்ச்சித் துறையின் மாபெரும் திட்டமான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட கிராமங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படுவதால், கிராம அளவில் ஒருங்கிணைப்பு நன்றாக இருக்கும் என்பது இதனுடைய சிறப்பு.

தனி மரம் தோப்பாகாது

தனி மரம் தோப்பாகாது

"தனி மரம் தோப்பாகாது" "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என்ற மூதுரைகளுக்கு
ஏற்ப தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் உள்ள உழவர்களை ஒருங்கிணைத்து, உழவர்
உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்கி, தேவையான தொழில்நுட்ப பயிற்சிகள்
அளித்து, வேளாண்மை - உழவர் நலத் துறையின் பல துறைகளின் திட்டங்கள்
செயல்படுத்தப்படும். இதனால் கிராமங்களில் ஒட்டுமொத்த வளர்ச்சி பலப்படும்
என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிகாரிகளுக்கு வேண்டுகோள்

அதிகாரிகளுக்கு வேண்டுகோள்

மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையுடன் ஒருங்கிணைந்து திட்டங்கள்செயல்படுத்தப்படவுள்ளதால், கிராம அளவில் தன்னிறைவு ஏற்படும். அதனால்
நகரத்தினை நோக்கி, கிராம மக்கள் இடம்பெயர்தல் தடுக்கப்படும். எனவே, அனைத்துத் துறை அலுவலர்களும் அர்ப்பணிப்போடு, சிந்தையையும் செயலினையும் ஒரே
நேர்கோட்டில் செலுத்தி, அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்
திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்திடக் கேட்டுக் கொள்கிறேன்.

English summary
Cm Stalin says, Nature also cooperates with the DMK government
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X