கொடிநாள் வசூலில் தமிழகம் தான் எப்போதும் முன்னோடி! முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொடிநாள் வசூலில் தமிழகம் தான் எப்போதும் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அதேபோல் இந்த ஆண்டும் பெருமளவில் நிதி வழங்கி, படை வீரர்களின் குடும்பத்தினருக்கு வணக்கத்தையும், நன்றியையும் காணிக்கையாக்கிட வேண்டும் என தமிழக மக்களை கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

கொடி நாள்

கொடி நாள்

இல்லத்தை மறந்து, எல்லையோரத்தில் பல இன்னல்களைத் தாங்கி, நாட்டுப்பற்று என்கிற நம்பிக்கையை மட்டும் இதயத்தில் ஏந்தி, இந்திய ஒருமைப்பாட்டுக்காக தவம் இருக்கிற முப்படை வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து, நம் சேமிப்பின் ஒரு பகுதியை ஒப்படைக்கும் உன்னதத் திருநாள், இந்தக் கொடிநாள்.

பகைவர்களை விரட்டும்

பகைவர்களை விரட்டும்

பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்து, நாட்டின் அத்தனை பகுதிகளையும் பத்திரப்படுத்தும் உத்தமச் செயலை சமரசம் செய்து கொள்ளாமல், உயிரைத் துச்சமென மதித்து, சீருடைக்குள் தங்கள் எண்ணச் சிறகுகளையெல்லாம் ஒடுக்கி, ஆசைகளையெல்லாம் குறுக்கி, பகைவர்களை விரட்டும் ஒப்பற்ற செயலை மேற்கொள்கின்ற படை வீரர்களின் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துத் தருவது நம் மகத்தான கடமை.

நாம் கொடுக்கும் கொடை

நாம் கொடுக்கும் கொடை

படை வீரர்களின் வாழ்க்கை, 'நம் இல்லத்தைப் பார்த்துக்கொள்ள நாடே அணிதிரண்டு நிற்கிறது' என்கிற நன்னம்பிக்கை ஒளிவீச, கொடி நாளுக்கு கொடுக்கும் நம் கொடையே அத்தாட்சி. அது அவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு வகைகளில் பயன் தரும்.

பெரும் தொகை

பெரும் தொகை

கொடி நாளில் பெரும் தொகையை வசூலித்துத் தருகிற செயலில் தமிழ்நாடு எப்போதும் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. இந்த ஆண்டும் பெருமளவில் நிதி வழங்கி, அவர்தம் குடும்பத்தினருக்கு வணக்கத்தையும், நன்றியையும் காணிக்கையாக்கிட, உங்களுக்கு என் கோரிக்கையை வைக்கிறேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+