தும்மினாலும் கூட விமர்சிக்க சிலர் தயாராக இருக்கிறார்கள்.. அமைச்சர் இல்ல விழாவில் முதல்வர் விமர்சனம்
சென்னை: தும்மினாலும் கூட சிலர் விமர்சிக்க தயாராக இருக்கிறார்கள் என அமைச்சர் நாசர் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
திருவேற்காடு அருகே பால்வளத் துறை அமைச்சர் நாசரின் மகன் திருமணம் நடைபெற்றது. இந்த விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த திருமணம் நடைபெற்றது. மணமக்கள் முதல்வர் ஸ்டாலின், துர்கா காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர். பின்னர் முதல்வருக்கு அமைச்சர் நாசரும், முதல்வரின் மனைவி துர்காவுக்கு நாசர் மனைவியும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

முதல்வர் ஸ்டாலின் பேச்சு
இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், மகன் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த வேண்டாம். அவ்வாறு நடத்தினால் சிலர் விமர்சிப்பார்கள். நாம் தும்மினால் கூட விமர்சிக்க சிலர் தயாராக இருக்கிறார்கள் என கூறியிருந்தேன். நான் கூறியபடி அவரும் தனது மகன் திருமணத்தை எளிமையாகவே நடத்தியுள்ளார்.

பால்வளத் துறை அமைச்சர்
பால் வளத் துறை அமைச்சராக இருக்கும் நாசர், ஆவின் நிறுவனத்தில் செய்யும் ஆய்வுகளை பார்த்துள்ளேன். உணவு பொருளில் முடி விழக் கூடாது என்பதற்காக போடப்படும் தொப்பியை போட்டுக் கொண்டு ஆய்வு பணிகளை அவர் மேற்கொள்வதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும்.

அதிமுக ஆட்சி
கடந்த அதிமுக ஆட்சியை காட்டிலும் திமுக ஆட்சியில் ஆவின் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் அமைச்சர் நாசரின் உழைப்புதான். ஆவின் நிறுவனத்தோடு அவரது உழைப்பு நின்றுவிடவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆவடியை சேர்ந்த டான்யா என்ற மாணவி முகச்சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்தார்.

பள்ளியில் ஒதுக்கி வைத்த கொடூரம்
இதனால் தன்னை பள்ளியில் ஒதுக்கி வைப்பதாகவும் தனது படிப்பு பாழாவதாகவும் வீடியோவாக வெளியிட்டிருந்தார். இதை பார்த்ததும் மன வேதனை அடைந்த நான் உடனே அமைச்சர் நாசரை அழைத்தேன். அந்த மாணவிக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்றேன். உடனே சிறுமியின் வீட்டுக்கு சென்ற அமைச்சர் நாசர், விவரங்களை கேட்டறிந்தார்.

டான்யாவுக்கு சிகிச்சை
பின்னர் சவிதா மருத்துவமனையே இலவசமாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதாக அறிவித்த நிலையில் அந்த அறுவை சிகிச்சை முடிந்து சிறுமி வீடு திரும்பும் வரை அமைச்சர் நாசர் உடனிருந்து கவனித்து கொண்டார். தற்போது அந்த குழந்தை பள்ளிக்குச் சென்று வருகிறார். ஆவினில் பல புதிய பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நம்பர் 1 தமிழ்நாடு
நம்பர் 1 தமிழ்நாடு என்ற கனவு நிறைவேறியுள்ளது. ஆவின் மூலம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெற்றுள்ளனர். பால்வளத் துறை அமைச்சரானதும் பால் விலையை நாசர் குறைத்தார். தமிழக அரசின் சாதனைகளை ஆங்கில ஊடகங்கள் பாராட்டி வருகின்றன என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சர் மூர்த்தியின் இல்ல திருமண விழா வெகுவிமரிசையாக நடந்தது. இந்த திருமண விழாவை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு நடத்திய திருமணத்துடன் ஒப்பிட்டு விமர்சிக்கப்பட்டிருந்தது. 2000 ஆடுகள், 5000 கோழிகள், 100 கோடி செலவு என அமைச்சர் மூர்த்தியின் இல்லத் திருமண விழா குறித்து நிறைய தகவல்கள் உலா வந்தன. இந்த திருமணத்தை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வெகுவாக விமர்சனம் செய்தன. இதை மனதில் வைத்துதான் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் நாசர் மகன் திருமணத்தை பிரம்மாண்டாக நடத்த வேண்டாம் என அறிவுறுத்தியிருப்பார் என கூறப்படுகிறது.
-
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்! -
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,! -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
ஓவர் நைட்டில் பேமஸான.. அங்கீகாரமே இல்லாத NCPI கட்சி! TMC எம்பிக்கள் என்ன பண்ணியிருக்காங்கனு பாருங்க -
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
ரீல்ஸ் போடுங்கப்பா..ஆட்சியை பிடிக்கலாம்! அதிமுக கூட்டத்தில் அள்ளி விட்ட எடப்பாடி! ஆடிப்போன ஐடி விங்! -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்!












Click it and Unblock the Notifications