முதல்வர் ஸ்டாலினுக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு.. பாடகி பிரியங்காவுடன் இணைந்து பாடி அசத்தல்!
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரபல இசைக் கலைஞர்கள், பாடகர்களுடன் உரையாடியுள்ளார். அவர்களுடன் இணைந்து பாடல் பாடி அசத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றுள்ள 'Vibe With MKS' நிகழ்ச்சியின் இரண்டாவது எபிசோடு வெளியாகியுள்ளது.
இளம் தலைமுறையினரை ஈர்க்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்குபெறும் 'வைப் வித் MKS' என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது எபிசோடு வெளியாகியுள்ளது. விளையாட்டு வீரர்களை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த விளையாட்டு சார்ந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அடுத்த எபிஸோடில், தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இசைக் கலைஞர்ளை அழைத்து அவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடி உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் மதன் கார்க்கி, பாடகர்கள் அந்தோனி தாஸ், கானா முத்து, பிரியங்கா, இசையமைப்பாளர் தென்மா உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கலந்துரையாடி உள்ளனர். இதில் அவர்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சுவாரஸ்யமாக பதில் அளித்துள்ளார்.
மதன் கார்க்கி, அண்மையில் முதல்வர் ஸ்டாலின் வின்டேஜ் காரில் பயணம் செய்தது குறித்த கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், "கலைஞர் உடன் பெங்களூர் போய் தங்கி இருந்தோம். சினிமா பாடல் எழுதுவதற்காக சென்றிருந்தோம். அப்போது நான் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தேன். அப்போது 'ஃபியட் செலக்ட்' காரில் அழைத்து சென்று கார் ஓட்ட கற்றுக் கொடுத்தார்கள்.
எனக்கு கார் ஓட்டுவதில் ஆர்வம் அதிகம். கட்சியில் இளைஞரணி தலைவராக பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதும் 7 பேர் கொண்ட குழுவாக பயணித்தோம். அப்போது கார் ஓட்டுநரை பின்னால் வர சொல்லிவிட்டு நான் தான் கார் ஓட்டுவேன். எனக்கு குறிப்பாக இரவு நேரத்தில் கார் ஓட்டுவது பிடிக்கும்.
தற்போது முதல்வராக பதவியேற்ற பிறகு கார் ஒட்டுவதை விட்டுவிட்டேன். தினமும் தொல்காப்பியர் பூங்காவிற்கு நடைபயணம் செல்வது வழக்கம். அப்போது அந்த காரை எடுத்து வந்து இருந்தார்கள். பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. உடனே வீடு வரைக்கும் ஓட்டி வந்தேன். கார் ஓட்டுவது எனக்கு மிகவும் பிடிக்கும்" என்று கூறினார்.
தொடர்ந்து, நீங்கள் பயணம் செல்லும் போது அதிகமாக கேட்கும் பாடல் எது என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், "டி டி கே என்று ஒரு கேசட் வரும். அதில் ரெக்கார்ட் செய்து வைப்பேன். அதிலும் நான் மிகவும் பழைய பாடல்களை தான் கேட்பேன். குறிப்பாக எம்.ஜி. ஆர் பாடல்களை தான் அதிகம் கேட்பேன். மன்னாதி மன்னன் படத்தில் அச்சம் என்பது மடமையா.. அஞ்சாமை திராவிட உடைமையடா என்ற பாடலை விருப்பி கேட்பேன்.
The soul of Tamil Nadu speaks through its music. It inspires, it preserves, it evolves.🎶
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) January 15, 2026
Spent time with some of our talented musicians, to understand their craft, their energy, their world. They are not just creating music; they are keeping our heritage alive and shaping its… pic.twitter.com/BUKDy7QlWQ
அதே போல், "நீ இல்லாத உலகத்தில் நிம்மதி இல்லை" என்ற பாடலும் அதிகமாக விரும்பி கேட்பேன்." என்றார். மேலும், பாடகி பிரியங்கா வேண்டுகோளை ஏற்று, முதல்வர் ஸ்டாலின் பாடகர்களுடன் சேர்ந்து அந்தப் பாடலைப் பாடினார். தன்னுடைய அரசியல் ஈடுபாடுகளுக்கு மத்தியில் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளை இசைக் கலைஞர்களிடம் மனம் விட்டு பேசியது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், "தமிழ்நாட்டின் ஆன்மா அதன் இசையின் மூலம் பேசுகிறது. அது ஊக்கமளிக்கிறது, பாரம்பரியத்தைப் பாதுகாக்கிறது, பரிணாமம் அடைகிறது. திறமையான இசைக்கலைஞர்கள் சிலருடன் நேரம் செலவிட்டு, அவர்களின் கலையாற்றல், அவர்களின் ஆற்றல், அவர்களின் உலகம் ஆகியவற்றை அறிந்துகொண்டேன். அவர்கள் வெறும் இசையை மட்டும் உருவாக்கவில்லை; அவர்கள் நமது பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள், எதிர்காலத்தை வடிவமைக்கிறார்கள். பண்பாட்டைக் கொண்டாடும், பேரார்வத்தை மதிக்கும், உண்மையான கலைத்திறனை அங்கீகரிக்கும் உரையாடல் இது" என்று தெரிவித்துள்ளார்.
-
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்!












Click it and Unblock the Notifications