Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா கூட்டணி.. அடடா ஸ்டாலின் சொன்னதை கவனிச்சீங்களா? நேஷனல் லெவலில் எல்லாம் மாறுதே.. சூசகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா கூட்டணி தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று குறிப்பிட்ட சில விஷயங்கள் அரசியல் ரீதியான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், தன்னிகரற்ற தலைவர் கலைஞர் தன் தோளிலும் நெஞ்சிலும் அரைநூற்றாண்டு காலம் சுமந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை நான் சுமக்கத் தொடங்கி இன்றுடன் ஐந்தாண்டுகள் நிறைவடைகின்றன. இந்த ஐந்தாண்டு காலத்தில் கண்ட களங்கள் அனைத்திலும் வெற்றி! காரணம், உடன்பிறப்புகளாகிய உங்களின் உழைப்புதான். உங்களின் ஆதரவு இருக்கும்வரை எந்தக் களத்திலும் உங்களில் ஒருவனான என்னால் வென்று காட்ட முடியும்.

CM Stalin statement on INDIA alliance gets attention through Nation Wide

நமது மாநிலத்திற்கு மட்டுமல்ல, #INDIA முழுவதற்குமான விடியலைத் தருவோம்! மதவாத இருட்டை விரட்டியடிப்போம்! காண்கின்ற களம் அனைத்திலும் வெற்றியைக் குவிப்போம்.

டெல்டா மாவட்டங்களில் 4 நாட்களாகப் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு, மக்கள் காட்டிய அன்பையும் கழகத்தினர் அளித்த வரவேற்பையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுச் சென்னை திரும்பியிருக்கிறேன். இப்பயணத்தில் மிக முக்கியமான நிகழ்வு என்பது, முத்தமிழறிஞர் படித்த பள்ளியில் 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட' விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்தது.

தன்னிகரற்ற தலைவர் கலைஞர் அரைநூற்றாண்டு காலம் சுமந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை நான் சுமக்கத் தொடங்கி இன்றுடன் (ஆகஸ்ட் 28) ஐந்தாண்டுகள் நிறைவடைகின்றன. தலைவர் கலைஞரின் பேராற்றல் எனக்கு இல்லை. ஆனால், தலைவர் கலைஞரிடம் நான் கற்றுக்கொண்டு, அவரிடமே பாராட்டு பெறும் அளவிற்கு உழைக்கக்கூடிய வலிமை எனக்கு உண்டு.

ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியாளர்கள் தங்களுக்கு எக்காலத்திலும் வெற்றி வாய்ப்பு இல்லாத தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதை மக்கள் அறிவார்கள். இத்தகைய நிலையிலும், தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அயராமல் உழைக்கிறது திராவிட மாடல் அரசு. விடியல் வெளிச்சத்தை மக்கள் அனுபவிக்கிறார்கள்.

ஒன்றிய ஆட்சியிலும் மாற்றம் ஏற்பட்டால்தான், நமது மாநிலத்திற்குரிய நிதி ஒதுக்கீடு முறையாகக் கிடைக்கும். முழுமையான வெளிச்சம் பரவும். அதற்காகத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 26 கட்சிகள் இணைந்த இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

கழகத்தின் தலைவர் என்ற பொறுப்பை நான் சுமந்த இந்த ஐந்தாண்டு காலத்தில் கண்ட களங்கள் அனைத்திலும் வெற்றி.. வெற்றி.. மகத்தான வெற்றி! நமது மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாடு முழுவதற்குமான விடியலைத் தர வேண்டிய பொறுப்பில் கழகம் பங்கேற்றிருக்கிறது.

உங்கள் ஆதரவுடன் அந்தப் பொறுப்பை நிறைவேற்ற, உங்களில் ஒருவனான நான் ஆயத்தமாக இருக்கிறேன். காண்கின்ற களம் அனைத்திலும் வெற்றியைக் குவிப்போம்! இந்தியா என்ற பெயரைக் கேட்டாலே ஒன்றிய பா.ஜ.க அரசு அலறக்கூடிய நிலை உருவாகியிருக்கிறது. உண்மையான இந்தியா நம் பக்கம்தான் இருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே மதவாத இருட்டை விரட்டும் விடியல் தேவைப்படுகின்ற காலம் இது. அதற்காகத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 26 கட்சிகள் இணைந்த இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா என்ற பெயரைக் கேட்டாலே ஒன்றிய பா.ஜ.க அரசு அலறக்கூடிய நிலை உருவாகியிருக்கிறது. உண்மையான இந்தியா நம் பக்கம்தான் இருக்கிறது. அந்த இந்தியாதான் இந்தியாவுக்கு விடியலைத் தரக்கூடிய வலிமை கொண்டதாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திகழும். உருவாக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியாளர்கள் தங்களுக்கு எக்காலத்திலும் வெற்றி வாய்ப்பு இல்லாத தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதை மக்கள் அறிவார்கள். தங்கள் கட்சியின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியைவிடப் பெருமளவு குறைவாகவே தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். இத்தகைய நிலையிலும், தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அயராமல் உழைக்கிறது திராவிட மாடல் அரசு, என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாலின் கடிதம்: இந்தியா கூட்டணி தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று குறிப்பிட்ட சில விஷயங்கள் அரசியல் ரீதியான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்து 3வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.

எதிர்பக்கம் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம், சமாஜ்வாதி, ஆம்ஆத்மி, திமுக உள்பட 26 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' எனும் கூட்டணியை உருவாக்கி உள்ளன.

இந்த கூட்டணி குறித்த விவாதங்கள் நடந்து வரும் நிலையில்தான் இந்தியா கூட்டணி தொடரும் என்று ஸ்டாலின் அடித்து சொல்லி இருக்கிறார். மதவாத இருட்டை விரட்டியடிப்போம்! காண்கின்ற களம் அனைத்திலும் வெற்றியைக் குவிப்போம் என்று உறுதியாக ஸ்டாலின் கூறி இருக்கிறார். இதன் மூலம் இந்தியா கூட்டணி தொடரும் என்பதை ஸ்டாலின் உறுதியாக தெரிவித்துள்ளார்.

இந்திய கூட்டணியில் சலசலப்பு ஏற்படுவதாக சில செய்திகள் வரும் நிலையில்தான் ஸ்டாலின் இந்த உறுதியை கொடுத்துள்ளார். லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தக் கூட்டணியின் 3-வது கூட்டம் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1-ந் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஸ்டாலினும் கலந்து கொள்ள உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+