Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காரை எடுத்துக்கொண்டு.. திடீரென "அந்த" எம்எல்ஏ ஆபிசுக்கே போன ஸ்டாலின்.. புதுசா? என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று முதல்வர் ஸ்டாலின் திடீரென எம்எல்ஏ ஒருவரின் அலுவலகத்திற்கு சென்று விசிட் அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் பள்ளிகளில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. முக்கியமான மாணவர்களின் மனநலத்தை பேணிக்காக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

முக்கியமாக தமிழ்நாடு பள்ளி மாணவர்களின் நலன் தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கியமான திட்டம் ஒன்றை தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கு மனநல பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

திமுக பள்ளி

திமுக பள்ளி

அரசு பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. பள்ளிகளில் குற்றச்செயல்கள், மாணவ, மாணவியர் தற்கொலையை தடுப்பதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி மாணவ மாணவியர்கள் இதில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். 10 மணி நேர பயிற்சி வருடம் முழுக்க பிரித்து அளிக்கப்படும். இந்த பயிற்சியில் மானவர்கள் மன அழுத்தத்தை எப்படி எதிர்கொள்வது, கோபம், ஏமாற்றத்தை எப்படி எதிர்கொள்வது, தற்கொலை எண்ணத்தை எப்படி கட்டுப்படுத்துவது போன்ற பயிற்சிகள் வழங்கப்படும்.

ஸ்டாலின்

ஸ்டாலின்

அதேபோல் மாணவ, மாணவியருக்கு விளையாட்டு, கலைகள் போன்ற மற்ற பயிற்சிகளை வழங்கி அவர்களை வேறு திசைக்கு கொண்டு சென்று, அவர்களுக்கு நம்பிக்கையை கொடுப்பது போன்ற பணிகளும் செய்து தரப்படும். அதன் ஒரு கட்டமாக பள்ளி மாணவர்களின் மன உறுதி காக்கும் மன நல நல்லாதரவு மன்றம் மற்றும் மன நல சேவை விரிவாக்கம் என்ற விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் வில்லிவாக்கம் சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏ வெற்றியழகன் கலந்து கொண்டார்.

என்ன திட்டம்

என்ன திட்டம்

தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கு மனநல பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அரசு பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. தமிழ்நாடு முழுக்க 10 மாவட்டங்களில் 250 பள்ளிகள் முதல் கட்டமாக இதற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது. சரியாக ஒரு வருடம் கழிந்த பின் தமிழ்நாடு முழுக்க அனைத்து பள்ளிகளிலும் இந்த திட்டம் கொண்டு வரப்படும். அதேபோல் ஆசிரியர்களுக்கும் இதில் பயிற்சி வழங்கப்படும். பள்ளிகளுக்கு 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இந்த வகுப்புகளை எடுக்க பயிற்சி அளிக்கப்படும். அதேபோல் மனஅழுத்ததில் இருக்கும் ஆசிரியர்கள், வேலைகளை சரியாக செய்ய முடியாமல் கோபம் அடையும் ஆசிரியர்கள் ஆகியோருக்கும் இதில் தனியாக ஆலோசனைகள் வழங்கப்படும்.

விசிட்

விசிட்

இந்த நிகழ்வு முடிந்த பின் முதல்வர் ஸ்டாலின் திடீரென காரை எடுத்துக்கொண்டு வெற்றியழகன் அலுவலகத்திற்கு சென்றார். எம்எல்ஏவின் அலுவலகத்தில் திடீரென அவர் விசிட் அடித்தார். எம்எல்ஏவிடம் அவரின் தொகுதிகள் குறித்து கேட்டறிந்தார். தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பினார். அதன்பின் புனரமைக்கப்பட்ட எம்எல்ஏ அலுவலகம் உள்ளே பார்வையிட்டார். அலுவலகம் உள்ளே இருக்கும் பொருட்களை பார்த்து அதை பற்றி விவரங்களை முதல்வர் ஸ்டாலின்கேட்டார் . அங்கே எம்எல்ஏ இருக்கையில் ஸ்டாலினை அமரும்படி எம்எல்ஏ வெற்றியழகன் கோரிக்கை வைத்தார். இதையடுத்து அலுவலகத்தை பார்வையிட்டு முதல்வர் ஸ்டாலின் எம்எல்ஏ வெற்றியழகன் தோழை தட்டிக்கொடுத்தார்.

என்ன நடந்தது ?

என்ன நடந்தது ?

முதல்வர் ஸ்டாலின் இப்படி எம்எல்ஏக்கள் அலுவலகத்திற்கு திடீரென செல்லும் நிகழ்வுகள் தற்போது அடிக்கடி நடக்க தொடங்கி உள்ளன. சமீபத்தில்தான் முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலத்தில் இருக்கும் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறைக்கு திடீரென சென்றார். அங்கி சில நிமிடங்கள் இவர்கள் பேசிக்கொண்டனர். அதன்பின் முதல்வரிடம் பிடிஆர் ரிப்போர்ட்டை கொடுத்தார். இந்த நிலையில் தற்போது வில்லிவாக்கம் எம்எல்ஏ அறைக்கு சென்றுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+