ஓபிஎஸ்ஸுக்கு போன் போட்ட ஸ்டாலின்.. ‘வருத்தம்.. மீண்டு வாங்க..’ ஆறுதல் சொன்ன முதல்வர்!
ஓபிஎஸ்ஸை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
சென்னை : முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓ.பன்னீர்செல்வத்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.
ஓபிஎஸ் தாயார் மறைவையடுத்து உடனடியாக இரங்கல் செய்தியைப் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், தனது சார்பில் அமைச்சர் ஐ.பெரியசாமியை நேரில் அனுப்பினார்.
இந்நிலையில், இன்று மாலை ஓபிஎஸ்ஸை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

கதறி அழுத ஓபிஎஸ்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 95. வயது முதிர்வின் காரணமாக அவரின் உடல்நிலை மோசமாகி வந்தது. இதற்காக தேனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். தகவல் அறிந்த ஓபிஎஸ் சென்னையில் இருந்து உடனடியாக தேனி சென்றார். தனது தாயாரின் முகம் பார்த்தும் காலைப் பிடித்து கதறி அழுதார் ஓ.பன்னீர்செல்வம்.

போன் போட்ட முதல்வர்
இன்று மாலை ஓபிஎஸ்ஸின் தாயார் இறுதிச் சடங்கு நடைபெற்றது. இறுதிச் சடங்குகள் முடிந்து அவரது உடல் பெரியகுளம் நகராட்சி பொதுமயானத்தில் தகனம் செய்யப்பட்டது. ஓபிஎஸ் தாயார் உடலுக்கு உறவினர்கள், அதிமுகவினர் மற்றும் பல்வேறு கட்சியினர் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். திமுக சார்பில் அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

ஆறுதல்
இந்நிலையில், ஓபிஎஸ்ஸை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, அவரது தாயார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, தனது தாயார் மறைவால் வாடும் ஓபிஎஸ்ஸுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இரங்கல்
முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைகிறேன். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications