டெல்லி ஷா என்ற நினைப்போடு.. தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால்.. முதல்வர் ஸ்டாலின் பதிலடி!
சென்னை: டெல்லி ஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்பு படை உங்களுக்கு தக்க பாடம் புகட்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு என்றுமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் தான் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே உள்ளது. பிப்ர்வரி இறுதி அல்லது மார்ச் தொடக்கத்தில் தமிழக தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திமுக தரப்பில் தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஏற்கனவே SIR பணிகளில் திமுக நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக தரப்பில் என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி என்ற புதிய பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் உள்ள தனது வாக்குச்சாவடி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். ஒரு வாக்க்ச்சாவடியில் 440 வாக்குகளை இலக்காக நிர்ணயித்து ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உறுப்பினர்களுக்கும், அவரவர்களுக்கான இலக்கையும் ஸ்டாலின் நிர்ணயித்து கொடுத்தார்.
இதையடுத்து திமுக வாக்குச்சாவடி உறுப்பினர்கள் ஒரு மாதம் வீடு வீடாக சென்று பரப்புரை மேற்கொள்ள உள்ளனர். அதேபோல் இந்த குழுக்களில் மகளிர் ஒருவராவது கட்டாயம் இருக்க வேண்டும் என்று திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலமாக திமுக தேர்தல் பணிகளை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன? டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்! தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்! என்று பதிவிட்டுள்ளார்.
இதன் மூலமாக ஸ்டாலின் நேரடியாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை அட்டாக் செய்திருப்பதாக பார்க்கப்படுகிறது. அரசியல் சாணக்கியர் என்ற அமித்ஷாவை பாஜக கூறி வரும் நிலையில், தமிழக தேர்தல் களத்தில் ஸ்டாலின் நேரடியாக சவால் விடுத்துள்ளார். இதன் மூலமாக பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தையும் திமுக முன்னெடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications