4 துறைகளின் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தும் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: அரசின் நலத்திட்டங்களை விரைவாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு பல்வேறு துறைகள் சார்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.

நெடுஞ்சாலை சிறு துறைமுகங்கள் துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை, உணவுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை ஆகிய துறைகளின் சார்பில் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. துறை அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, சக்கரபாணி, கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் அந்தந்த துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. முக்கிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்துவது பற்றி முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்க உள்ளார்.












Click it and Unblock the Notifications