இது லிஸ்டுலேயே இல்லையே.. மீண்டும் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.. இன்றே தூக்கி அடிக்கப்படும் தலைகள்
சென்னை: முதல்வர் ஸ்டாலின் நேற்று முதல்நாள் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய நிலையில் இன்று மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்ற உள்ளார்.
நேற்று முதல்நாள் தமிழ்நாட்டில் உயர் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் நடந்தது.
அதன்படி முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி சுகாதாரத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா, உள்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
போக்குவரத்துத்துறை செயலாளர் கோபால், லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் பொதுப்பணித்துறை செயலாளராக மாற்றம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி போக்குவரத்துத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
அடுத்த மாற்றம்: இந்த மாற்றத்தோடு முடிவு நிற்காது. அடுத்து மாவட்ட ஆட்சியர்கள் பலர் மாற்றப்பட உள்ளனர். இன்று மாவட்ட ஆட்சியர்கள் 12 பேர் அல்லது அதற்கும் மேற்பட்டோர் மாற்றப்பட உள்ளனர்.
இன்று மாலைக்குள் அதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. அதன்பின் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை ஐபிஎஸ் அதிகாரிகள் பலரும் மாற்றப்பட உள்ளனர்.
தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பதவிக்காலம் முடிய உள்ளது.. லஞ்ச ஒழிப்புத்துறை கந்தசாமி ஐபிஎஸ் பதவிக்காலம் முடிந்துவிட்டது.
இவர்களுக்கு மாற்று அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அதேபோல் 2024 லோக்சபா தேர்தலுக்காக புதிய நம்பிக்கையான போலீஸ் அதிகாரிகளை உயர் பொறுப்புகளில் நியமிக்க வேண்டும்.
2024 லோக்சபா தேர்தல், 2026 சட்டசபை தேர்தல் இரண்டையும் மனதில் வைத்தே முதல்வர் ஸ்டாலின் இந்த மாற்றங்களை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்று 2 வருடம் ஆகிவிட்டது.
இந்த நிலையில் 3.0 வெர்ஷன்.. அதாவது மூன்றாவது வருட ஆட்சியில் பல அதிரடியை நிகழ்த்த.. பல கண்டிப்புகளை காட்ட முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்து இருக்கிறாராம்.
அமைச்சரவை மாற்றம்: தமிழ்நாடு அமைச்சரவையில் கடந்த 4 நாட்களுக்கு முன்தான்பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டன. தமிழ்நாடு நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு ஆண்டு முடிவில் சில அமைச்சர்களை மாற்ற முடிவு செய்துள்ளார்.
மேலும் ஐடி துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக மாற்றப்பட்டு உள்ளார்.

அதேபோல் அமைச்சர் சாமிநாதன் தமிழ் வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
இதில் பிடிஆர் மாற்றம் உள்ளிட்ட சில நடவடிக்கைகள் மிகப்பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications