3.0.. இனிமேதான் ஆக்சனே இருக்கு.. கண்கள் சிவக்கும் ஸ்டாலின்.. தூக்கி அடிக்கப்படும் தலைகள்.. பரபரப்பு
சென்னை: முதல்வர் ஸ்டாலின் நேற்று பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய நிலையில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகளை வரும் நாட்களில் மாற்ற உள்ளார். அதேபோல் ஐபிஎஸ் அதிகாரிகளையும் மாற்ற உள்ளார் என்று கூறப்படுகிறது.
2024 லோக்சபா தேர்தல், 2026 சட்டசபை தேர்தல் இரண்டையும் மனதில் வைத்தே முதல்வர் ஸ்டாலின் இந்த மாற்றங்களை செய்து உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்று 2 வருடம் ஆகிவிட்டது.

இந்த நிலையில் 3.0 வெர்ஷன்.. அதாவது மூன்றாவது வருட ஆட்சியில் பல அதிரடியை நிகழ்த்த.. பல கண்டிப்புகளை காட்ட முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்து இருக்கிறாராம்.
தமிழ்நாடு அமைச்சரவையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. முதல்வர் ஸ்டாலினின் ஒரு இலாக்காவையும் சேர்த்து மொத்தமாக 11 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டன. உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டுத்துறை வழங்கப்பட்டது. அதேபோல் சிறப்பு திட்ட செயலாக்கம் துறை வழங்கப்பட்டு உள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மெய்யனாதன், சுற்றுச்சூழல் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சிறப்பு அமலாக்கத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அந்த மாற்றத்தின் போது டாப் இலாக்கா எதிலும் மாற்றம் செய்யப்படவில்லை. அமைச்சர்கள் துரைமுருகன், கே என் நேரு, அன்பில் மகேஷ், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, ஏவ வேலு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், ரகுபதி, செந்தில் பாலாஜி, மா சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகிய 11 அமைச்சர்களின் பதவிகளில் எந்த மாற்றமும் இல்லை.
மீண்டும் மாற்றம்
இந்த நிலையில் தமிழ்நாடு அமைச்சரவையில் 3 நாட்களுக்கு பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டன. தமிழ்நாடு நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு ஆண்டு முடிவில் சில அமைச்சர்களை மாற்ற முடிவு செய்துள்ளார்.
மேலும் ஐடி துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக மாற்றப்பட்டு உள்ளார்.
அதேபோல் அமைச்சர் சாமிநாதன் தமிழ் வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
இதில் பிடிஆர் மாற்றம் உள்ளிட்ட சில நடவடிக்கைகள் மிகப்பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதிகாரிகள் மாற்றம்:
அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டதும் எதிர்பார்த்தது போலவே நேற்று உயர் அதிகாரிகள் மாற்றமும் நடந்தது.
அதன்படி முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி சுகாதாரத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா, உள்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
போக்குவரத்துத்துறை செயலாளர் கோபால், லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் பொதுப்பணித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி போக்குவரத்துத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
அடுத்த மாற்றம்:
இந்த மாற்றத்தோடு முடிவு நிற்காது. அடுத்து மாவட்ட ஆட்சியர்கள் பலர் மாற்றப்பட உள்ளனர். அதன்பின் ஐபிஎஸ் அதிகாரிகள் பலரும் மாற்றப்பட உள்ளனர்.
தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பதவிக்காலம் முடிய உள்ளது.. லஞ்ச ஒழிப்புத்துறை கந்தசாமி ஐபிஎஸ் பதவிக்காலம் முடிந்துவிட்டது.
இவர்களுக்கு மாற்று அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அதேபோல் 2024 லோக்சபா தேர்தலுக்காக புதிய நம்பிக்கையான போலீஸ் அதிகாரிகளை உயர் பொறுப்புகளில் நியமிக்க வேண்டும்.
இது போக தமிழ்நாடு தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் கடந்த 2021ல் தேர்வு செய்யப்பட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததும் இவர் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாடு தலைமை செயலாளராக இருக்கும் இறையன்பு ஐஏஎஸ்ஸின் பதவிக்காலம் முடிய உள்ளது. இந்த நிலையில் அடுத்த தலைமை செயலாளர் யார் என்பது தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன. அந்த வகையில்தான் முதல்வர் ஸ்டாலின் தற்போது 5 பேர் கொண்ட லிஸ்டை எடுத்து இருக்கிறாராம்.
கூடுதல் தலைமைச் செயலாளர் பதவியில் 1986 ஆம் வருட பேஜ் அதிகாரியாக ஹன்ஸ்ராஜ் வர்மாவும், 1987 ஆம் வருட பேஜ் அதிகாரியாக டி.வி.சோமநாதனும் இருக்கிறார்கள். இதில் ஹன்ஸ்ராஜ்வர்மா தற்போது டிக் நிறுவனத்தின் சேர்மனாகவும் நிர்வாக இயக்குநராகவும் இருக்கிறார். சோமநாதன், மத்திய அரசின் நிதித்துறையில் செலவினங்கள் பிரிவின் செயலாளராக இருக்கிறார்.
1988 ஆம் வருட பேஜ் அதிகாரிகளில் இறையன்புவை தவிர்த்து விட்டால், விக்ரம்கபூர் இருக்கிறார். இவரும் மூத்த அதிகாரி. கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் இருக்கிறார்.
அதுல்யமிஸ்ரா இதற்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். இவர் அரசின் டாப் தரப்பிற்கு மிகவும் நெருக்கம். அதோடு இவரும் கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் இருக்கிறார்.
ஜித்தேந்திரநாத் ஸ்வைன் அதிகாரியும் கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் இருக்கிறார். இவர்களில் ஸ்வைன் மத்திய அரசு பணியிலும், மற்ற இருவரும் மாநில அரசு பணியிலும் இருக்கின்றனர்.
இந்த லிஸ்டில் பிரதீப் யாதவ் ஐஏஎஸ்ஸும் இணைந்து உள்ளார். இவர் 1992 தமிழ்நாடு பேட்சை சேர்ந்தவர். பல்வேறு துறைகளில் பணியாற்றிய இவர் அதிமுக ஆட்சியில் கல்வித்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போதே இவரின் செயல்பாடுகள் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. அதன்பின் இந்த ஆட்சியில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டு இவர் பணியாற்றி வருகிறார். தற்போது இவர் கூடுதல் தலைமை செயலாளராக பதவியும் பெற்றுள்ளார். இந்த நிலையில் இவர் கூடுதல் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளதால், அவரும் இந்த ரேஸில் இணைந்துள்ளார்.
2024 லோக்சபா தேர்தல், 2026 சட்டசபை தேர்தல் இரண்டையும் மனதில் வைத்தே முதல்வர் ஸ்டாலின் இந்த மாற்றங்களை செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications