"லேப்டாப் திட்டத்தை நிறுத்துனதே நீங்கதான்”.. எடப்பாடி பழனிசாமியிடம் சீறிய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: "மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நாங்கள் நிறுத்தவில்லை.. நீங்களே நிறுத்திவிட்டுத்தான் சென்றீர்கள். அந்த திட்டத்தை சரி செய்து மீண்டும் மடிக்கணினி வழங்குவதாக தற்போது பட்ஜெட்டில் அறிவித்துள்ளோம்" என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி, எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தார், ஜெயலலிதா மடிக்கணினி உட்பட ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தார். அவர்களால் கொண்டு வந்த திட்டங்களால் பயனடைந்தவர்களின் வயது 4. ஆனால் திமுகவினரால் கொண்டு வரப்படும் மகளிர் உரிமைத் திட்டத்தால் பயனடையும் பெண்களின் வயது வாக்களிக்கும் வயது. எனவே திமுக கொண்டு வரும் சமூக திட்டங்கள் சமூக மாற்றத்திற்காகவா? வாக்கு வங்கிக்காகவா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நாங்கள் கொண்டு வந்த பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். அந்த திட்டம் வாக்கு வங்கிக்காக கொண்டு வந்ததா?" என்று பதில் கேள்வி எழுப்பினார்.
அப்போது எழுந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "காலை உணவுத் திட்டம் நாங்கள் கொண்டு வந்த திட்டம். அதைத் தான் நீங்கள் தொடர்கிறீர்கள்" என்று தெரிவித்தார். அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அது எல்லாம் வாக்கு வங்கிக்காகவா இலங்கைத் தமிழர்களுக்கு திட்டங்கள் எதுவும் செய்யக் கூடாது என சொல்ல வருகிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட மடிக்கணினி திட்டத்தை நிறுத்தியது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் ஸ்டாலின் எழுந்து பதில் அளித்தார்.
பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "மடிக்கணினி திட்டத்தை நாங்கள் நிறுத்தவில்லை. நீங்கள் தான் நிறுத்திவிட்டீர்கள். நாங்கள் சிந்தித்து மீண்டும் அந்த திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்திருக்கிறோம். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடனே வாக்களித்த மக்களுக்கும், வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்து தான் இந்த அரசு இருக்கும் என ஏற்கனவே தெளிவாக சொல்லியிருக்கிறேன். எனவே இந்த விவாதம் தேவையற்றது" என்று பேசினார்.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications