மிகப்பெரிய ரிஸ்க்கே இதுதான்.. உளவுத்துறையை வச்சு ஸ்டாலின் போடும் கணக்கு.. லட்டு மாதிரி சான்ஸ்!
சென்னை: குதிரை பேரம் என்று வந்துவிட்டால் டெல்லி ஆட்டம் வேறு மாதிரி இருக்கும். இதற்கு ஏற்றபடி வேட்பாளர்கள் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும். மிகப்பெரிய ரிஸ்க்கே இதுதான். இதற்காகவே வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஸ்டாலின் கவனமாக இருக்க வேண்டும் என்ற திட்டத்தில் உள்ளாராம்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. ஏப்ரல் இரண்டாம் வாரம் சட்டசபை தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தீவிரமான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஆளும் திமுக ஒரு பக்கம் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. காங்கிரசுக்கு 31 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

அதே சமயம் திமுக தனது உதய சூரியன் சின்னத்தில் 170 இடங்களில் போட்டியிட திட்டமிடுகிறது. அப்படி நடந்தால் தனிப்பெரும்பான்மை பெறலாம் என்ற திட்டத்தில் திமுக உள்ளதாம். அதே சமயம் ஒருவேளை தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது என்ற யோசனையும் திமுக பக்கம் உள்ளதாம்.
களமிறக்கப்படும் உளவுத்துறை
இதற்காகவே உளவுத்துறையை களமிறக்க ஆளும் திமுக தரப்பு முடிவு செய்துள்ளதாம். சில விஷயங்களை கண்டிப்பாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு டீம் களமிறக்கப்பட்டு உள்ளது. பின்வரும் முக்கியமான விஷயங்கள் குறித்து உளவுத்துறை பல்வேறு விசாரணைகளை, கள ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது
1. தவெக யாருடைய வாக்குகளை பிரிக்கும் என்பது முக்கிய விஷயம்.. அதாவது தவெக எதிர்கட்சி வாக்குகளை பிரித்தால் அது திமுகவிற்கு பெரிய அளவில் சாதகமாக அமையும். அது கிட்டத்தட்ட திமுகவிற்கு லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பாக இருக்கும்.
2. அதுவே தவெக ஆளும் கட்சி வாக்குகளை பிரித்தால்.. உதாரணமாக சிறுபான்மையினர் வாக்குகளை பிரித்தால் அது அதிமுகவிற்கு பெரிய அளவில் சாதகமாக அமையும். அது கிட்டத்தட்ட திமுகவிற்கு எதிராக செல்லும்.
3. கிறிஸ்துவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் வாக்குகளை பிரித்தால் திமுகவிற்கு அது சிக்கல். மிகப்பெரிய ரிஸ்க்கே இதுதான்.
4. தவெக 20% வாக்குகளை எடுத்தால் பல இடங்களில் முடிவுகள் மாறும். இதனால் தொங்கு சட்டசபை கூட உருவாகும். களம் அப்படியே மாறும்.
5. தொங்கு சட்டசபை உருவானால்.. ஒவ்வொரு எம்எல்ஏவும் முக்கியம். குதிரை பேரன்கள் நடக்கும் கொடுமை ஏற்படும். குதிரை பேரங்கள் நடந்தால் அது ஆளும் திமுகவிற்கு நெருக்கடியை கொடுக்கும்.
6. குதிரை பேரம் என்று வந்துவிட்டால் டெல்லி ஆட்டம் வேறு மாதிரி இருக்கும். இதற்கு ஏற்றபடி வேட்பாளர்கள் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும். மிகப்பெரிய ரிஸ்க்கே இதுதான். இதற்காகவே வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஸ்டாலின் கவனமாக இருக்கிறாராம்.
7. காங்கிரசில் வேட்பாளர்களை இறக்கினால்.. அவர்கள் தொங்கு சட்டசபை வந்தால் பாஜக பக்கம் செல்ல கூடாது. அது கட்சி தாவல் தடை சட்டத்தை கொண்டு வர வழிவகுக்கும். மீண்டும் சில இடங்களில் இடைத்தேர்தல் வரலாம். அதனால் காங்கிரஸ் வேட்பாளர்கள் பற்றியும் உளவுத்துறை ரிப்போர்ட் எடுக்கும்.. பாஜக உடன் யாரெல்லாம் நெருக்கம் என்று கணக்கு எடுக்கும்.
8. இன்னொரு பக்கம் எங்கெல்லாம் தவெக அதிகமாக திமுக வாக்குகளை பிரிக்கிறது என்றும் சர்வே எடுக்கப்பட்டு களப்பணிகள் மாற்றப்படும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள் .
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்!












Click it and Unblock the Notifications