ரிசல்ட் நெகட்டிவ்வாக வந்தால்.. எச்சரிக்கையாக இருங்கள்.. ரெடியான ஸ்டாலின்.. இன்றே பறக்கும் ஆர்டர்
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல், தேர்தல் அறிக்கை ஆகியவை அறிவிக்கப்பட்டதை அடுத்து கொஞ்ச நேரம் அறிவாலயத்தில் இருந்து விட்டு ( வேட்பாளர்கள் முதல்வரிடம் வாழ்த்துப் பெற்றனர் ) வீட்டுக்கு கிளம்பிச் சென்றுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
மாலையில் மா.செ.க்களுடன் காணொலி காட்சி வழியாக தேர்தல் தொடர்பாக விவாதிக்கவிருக்கிறார். அப்போது, வேட்பாளர்கள் குறித்தும் தேர்தல் அறிக்கை குறித்தும் மா.செ.க்களின் கருத்துக்களை கேட்க திட்டமிட்டுள்ளார் ஸ்டாலின்.

மேலும், நம் வேட்பாளர்களை மட்டுமல்லாமல் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஜெயிக்க வைக்க வேண்டும் என்றும், ரிசல்ட் நெகட்டிவ்வாக வந்தால் ஏற்கனவே எச்சரித்தபடி பதவியிலிருந்து நீக்கப்படுவீர்கள் என்றும் மீண்டும் மா.செ க்களுக்கு எச்சரிக்கை செய்வார் தலைவர் ஸ்டாலின் என்கிறார்கள் அறிவாலயத்தார்.
இது தவிர, திமுகவின் தேர்தல் அறிக்கையை வீடுகள் தோறும் மக்களிடம் பிட் நோட்டீஸ் அடித்து கொடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துவார். அதுமட்டுமல்ல ; தேர்தல் செலவினங்கள் குறித்து, அரசின் செலவின பார்வையாளர்கள் கண்கொத்தி பாம்பாக சுற்றி சுற்றி வருவார்கள் என்பதால், செலவினங்களில் கரெக்ட்டாக இருக்க வேண்டும் என்றும் அட்வைஸ் செய்வது, பணப்பட்டுவாடா செய்வது உட்பட தேர்தல் தொடர்பான பல விசயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தவிருக்கிறார் ஸ்டாலின்.
வேட்பாளர் லிஸ்ட்: லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வேகமாக வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அதில்,
1 ) வடசென்னை - கலாநிதி வீராசாமி
2 ) தென்சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்
3 ) மத்திய சென்னை - தயாநிதி மாறன்
4 ) காஞ்சிபுரம் (தனி) - செல்வம்
5 ) அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்
6) வேலூர் - கதிர் ஆனந்த்
7 ) தருமபுரி - அ.மணி
8 ) திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை
9 ) சேலம் - செல்வ கணபதி
10 ) கள்ளக்குறிச்சி - மலையரசன்
11 ) நீலகிரி (தனி) - ஆ.ராசா
12 ) பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி
13 ) கோவை - கணபதி ராஜ்குமார்
14 ) தஞ்சாவூர் - ச.முரசொலி
15 ) தூத்துக்குடி - கனிமொழி கருணாநிதி
16 ) தென்காசி (தனி) - ராணி ஸ்ரீ குமார்
17 ) ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு
18 ) பெரம்பலூர் - அருண் நேரு
19 ) தேனி - தங்க தமிழ்செல்வன்
20 ) ஈரோடு - பிரகாஷ்
21 ) ஆரணி - தரணி வேந்தன்
திமுக தேர்தல் பிளான்: 2024 மக்களவைத் தேர்தல்: திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு விவரம்.
திமுக - 21
காங்கிரஸ் - 9 + புதுச்சேரி
விசிக - 2 (சிதம்பரம், விழுப்புரம்)
சிபிஐ - 2
சிபிஎம் - 2
மதிமுக -1
இயூமுலீ - 1 (ராமநாதபுரம்)
கொமதேக - 1 (நாமக்கல்)
திமுக - 21 ( வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்பத்தூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி, கள்ளகுறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பெரம்பூர், தஞ்சாவூர், தேனி , தூத்துக்குடி, தென்காசி, )
காங்கிரஸ் - 9 + புதுச்சேரி (தமிழ்நாட்டில் திருவள்ளூர், கடலூர், கிருஷ்ணகிரி, நெல்லை, சிவகங்கை, கரூர்,, கன்னியாகுமரி, விருதுநகர், மயிலாடுதுறையில் காங்கிரஸ் போட்டி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது)
விசிக - 2 (சிதம்பரம், விழுப்புரம்)
சிபிஐ - 2 (நாகை மற்றும் திருப்பூர் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது)
சிபிஎம் - 2 ( மதுரை, திண்டுக்கல்)
மதிமுக -1 (திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது)
இயூமுலீ - 1 (ராமநாதபுரம்)
கொமதேக - 1 (நாமக்கல்)












Click it and Unblock the Notifications