ரொம்ப முக்கியம்.. கிளம்பி வாங்க. டிஜிபி சங்கர் முதல் டாப் போலீசாருக்கு ஸ்டாலின் உத்தரவு.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக வரும் 11ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவின் பதவிக்காலம் கடந்த மாத இறுதியில் நிறைவு பெற்றது. இவரின் பதவிக்காலம் முடிந்ததால் கடந்த 4 வாரங்களாக புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வந்தன. சஞ்சய் அரோரா, சங்கர் ஜிவால், ஆபாஷ் குமார், சீமா அகர்வால், பி.கே.ரவி, ஏ.கே.விஸ்வநாதன், அம்ரேஷ் பூஜாரி உள்ளிட்டோரின் பெயர்கள் புதிய டிஜிபிக்கான லிஸ்டில் இடம்பெற்று இருந்தது.

Cm Stalin to hold an important meeting with DGP and other important officials

இவர்களின் லிஸ்டை மத்திய குடிமைப்பணிகள் ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு அனுப்பி ஆலோசனை செய்தது. அங்கே நடத்தப்பட்ட ஆலோசனையில் 3 பேரின் பெயர்கள் தேர்வாகி மீண்டும் தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து டெல்லி அனுப்பிய லிஸ்டில் இருந்து தமிழ்நாடு அரசு சென்னை கமிஷ்னராக இருந்த சங்கர் ஜிவாலை டிஜிபியாக நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். சென்னையின் புதிய போலீஸ் கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக வரும் 11ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஜூலை 11ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

அனைத்து மாவட்ட எஸ்.பிக்கள் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. பதவி ஏற்பிற்கு பின் டிஜிபி சங்கர் ஜிவால் முதல்வர் ஸ்டாலினுடன், போலீஸ் அதிகாரிகளுடன் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி ஆகும் இது.

புதிய டிஜிபிக்கு முக்கியமான அசைன்மென்ட் ஒன்றை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. லோக்சபா தேர்தலை மனதில் வைத்து இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

அசைன்மெண்ட்: அதன்படி தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் நிர்வாக பணிகளில் பல ஆர்எஸ்எஸ் ஆட்கள், பாஜக ஆட்கள் உள்ளே நுழைந்துவிட்டனர். இவர்கள்தான் தற்போது இருக்கும் ஆட்சியை பற்றிய சீக்ரெட்டுகளை வெளியே சொல்லி வருகிறார்கள். பல முக்கியமான விஷயங்கள் வெளியே கசிவது இவர்கள் மூலம்தான் என்று கூறப்படுகிறது.

கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்ததும் சித்தராமையா இது போன்ற நிர்வாகிகளை அடையாளம் கண்டு தூக்கும் பணியில் இறங்கி உள்ளார். ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடம் ஆகியும் ஸ்டாலின் இந்த நடவடிக்கைகளை எடுக்காத நிலையில்.. புதிய டிஜிபி மூலம் போலீஸ் துறையில் , உள்துறையில் இருக்கும் இது போன்ற வலதுசாரி சார்பு அதிகாரிகளை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

யார் இவர்?: 1990 பேட்ச் அதிகாரியான சங்கர் ஜிவால், உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவைச் சேர்ந்தவர். அவர் சேலம் மற்றும் மதுரையில் காவல் கண்காணிப்பாளராகவும், திருச்சி காவல் ஆணையராகவும், போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மண்டல இயக்குநராகவும் இதற்கு முன் இருந்துள்ளார். தற்போது சென்னை மாநகர கமிஷனராக இருக்கிறார்.

2008ல் ஐ.ஜி., உளவுத்துறை (உள் பாதுகாப்பு) ஐ.ஜி., ஆக உயர்த்தப்பட்டார். 2011ல், ஆறு ஆண்டுகள் ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்ட சிறப்பு அதிரடிப் படைக்கு தலைமை தாங்கினார். ஜிவாலுக்கு 2007ல் சிறந்த சேவைக்கான போலீஸ் பதக்கமும், 2019ல் சிறந்த சேவைக்காக ஜனாதிபதியின் போலீஸ் பதக்கமும் வழங்கப்பட்டது.

உளவுத்துறையில் சிறந்த அனுபவம் கொண்ட இவர் இன்ஜினீயரிங் படித்தவர். தமிழ், ஆங்கிலம் , இந்தியில் நல்ல புலமை கொண்டவர். அதேபோல் உத்தரகாண்டின் தாய்மொழியான குமானி மொழியும் தெரிந்தவர். கடந்த அதிமுக ஆட்சியில் அதிகமாக ஓரம்கட்டப்ப சங்கர் ஜிவால் திமுக ஆட்சியில் மீண்டும் சீனிற்கு வந்தார். அதன்பின்தான் இவர் சென்னை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.இதையடுத்து தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபியாக தற்போது இவர் பதவி ஏற்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+