பிரமாண்டமாக அமையும் கலைஞர் பன்னாட்டு அரங்கம்.. இன்று அடிக்கல் நாட்டுகிறார் ஸ்டாலின்! இவ்ளோ வசதிகளா?
சென்னை: சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் ரூ.525 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள கலைஞர் பன்னாட்டு மையத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 5,000 இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடம், கண்காட்சி அரங்கம், கூட்ட அரங்குகளுக்கான அரங்கம் ஆகியவை இங்கு அமைய உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுகா, முட்டுக்காட்டில் 'கலைஞர் பன்னாட்டு மாநாட்டு அரங்கம் மையம்' அமைக்கப்பட உள்ளது. ரூ.525 கோடி மதிப்பீட்டிலான இந்த திட்டத்தின் கீழ், சுமார் 5,000 இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடம், 10,000 பேர் பார்வையிடும் வசதி கொண்ட கண்காட்சி அரங்கம், கூட்ட அரங்குகளுக்கான அரங்கம் ஆகியன அமைய உள்ளன.

இந்த பன்னாட்டு அரங்கத்தில் திறந்தவெளி அரங்கம், உணவு விடுதிகள், சுமார் 10,000 வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்த வசதிகளும் அமைக்கப்படும். சாலை வசதி, நுழைவு வாயில், சுற்றுச்சூழல் வசதி என அனைத்து வசதிகளுடன் உலகத் தரத்தில் இந்த பன்னாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், ரூ.525 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள கலைஞர் பன்னாட்டு மையத்திற்கு இன்று காணொளிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் அரங்கத்தின் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு இலச்சினை வெளியீட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "சென்னையில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும். உலகளவில் உள்ள கூட்ட அரங்கங்களில் மகத்தான BEST IN CLASS' Convention Center ஆக இது அமைய வேண்டும்" என்று நினைப்பதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, உலகளாவிய தொழில் கண்காட்சிகள், வர்த்தக மாநாடுகள், தொழில்நுட்பக் கூட்டங்கள், உலக நிறுவனங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், உலகத் திரைப்பட விழாக்கள் போன்றவை நடக்கும் இடமாக 'கலைஞர் பன்னாட்டு அரங்கம்' அமைய வேண்டும் என எண்ணுகிறேன். இந்த எண்ணம் நான் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டபோது எனக்கு ஏற்பட்டது எனத் தெரிவித்தார் ஸ்டாலின்.
மிகப்பெரிய கன்வென்சன் சென்டர்கள் உலகின் பல நாடுகளில் இருப்பதுபோல தமிழ்நாட்டில், சென்னையில் இருக்கிறது. அதுவும் கலைஞர் பெயரால் இருக்கிறது என்பதுதான் மாபெரும் பெருமையாக இருக்கும். கன்வென்சன் சென்டர் போன்ற பயன்பாட்டுச் சின்னங்கள் கலைஞரின் புகழை நூற்றாண்டுகள் கடந்தும் உலகமெங்கும் எடுத்துச் செல்லும் எனக் கூறியிருந்தார்.
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா












Click it and Unblock the Notifications