ஆட்டத்தை கலைத்து ஆடும் ஸ்டாலின்! தமிழக அரசியலே குலுங்க போகுது! அந்த 3 முக்கிய சம்பவம் என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரம் கையை மீறி போன நிலையில் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளாராம். முதல்வர் ஸ்டாலின் இன்னும் 3 வாரங்களில் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்தார். அந்த பயணம் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரம் கையை மீறி போனதால் விரைவில் தமிழ்நாடு அரசியலில் பல மாற்றங்கள் செய்யப்படலாம் என்கிறார்கள்.

விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் தொடர்பான தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அடுத்த 1 மாதம் தேர்தல் தேதிகள் நடைமுறையில் இருக்கும்.

cabinet Udayanidhi Stalin DMK M K Stalin

வேட்புமனு தாக்கல் : ஜூன் 14 - 21
வேட்புமனு பரிசீலனை : ஜூன் 24
வேட்புமனு திரும்பப்பெற : ஜூன் 26
வாக்குப்பதிவு : ஜூலை 10
வாக்கு எண்ணிக்கை : ஜூலை 13

தேர்தல்; இந்த நிலையில் தேர்தல் முடிந்ததும்.. அதாவது 3 வாரங்கள் கழித்து முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளார். அதற்கு முன்னதாக தமிழ்நாட்டில் பல மாற்றங்களை முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்வார். முதல்வர் ஸ்டாலின் இன்னும் 3 வாரங்களில் வெளிநாடு செல்லும் நிலையில், விரைவில் தமிழ்நாடு அரசியலில் பல மாற்றங்கள் செய்யப்படலாம் என்கிறார்கள்.

மாற்றம் 1: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதேபோல் அமைச்சரவையிலும் பெரிய மாற்றம் வரப்போவதாக செய்திகள் வருகின்றன. விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியிலும், கட்சிக்கு வெளியே அதிகாரத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ஸ் கூடிக்கொண்டே வருகிறது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், துணை முதல்வர் பொறுப்பு குறித்து அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ''நான் எப்படி அதைச் சொல்ல முடியும் ? முதல்வர்தான் முடிவு எடுப்பார் '' என்று கூறினார் உதயநிதி ஸ்டாலின். இதே போன்ற கேள்வி இதற்கு முன்பும் பல முறை அவரிடம் கேட்கப் பட்டிருக்கிறது.

அப்போதெல்லாம், எனக்கே தெரியாத விசயங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரிகிறது. இதையெல்லாம் உங்களுக்கு யார் சொல்கிறார்கள்.. எனக்கு அப்படி எதுவும் தகவல் வரவில்லையே.. உங்களுக்கு யார் இது போன்ற தகவல்கள் வருகின்றன.. எனக்கு அப்படி தெரியவில்லையே ? '' என்கிற ரீதியில் மறுத்தே வந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

துணை முதல்வர் : ஆனால், இந்த முறை அப்படி எதுவும் மறுக்காமல், அதை எல்லாம் முதல்வர் முடிவெடுப்பார் என்று சொல்லி உள்ளார். அதாவது துணை முதல்வர் பற்றி முதல்வர் முடிவு எடுக்கட்டும் என்று உதயநிதி சொல்லாமல் சொல்லி இருக்கிறார். இப்படி சொல்லியிருப்பதன் மூலம், துணை முதல்வராக்க ஸ்டாலின் முடிவு செய்து விட்டார். அதனை எப்போது அறிவிக்க வேண்டும் என்பது மட்டும் தான் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று இளைஞரணி மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

முக்கியமாக பிறந்தநாள் விழாவில் உதயநிதி ஸ்டாலினுக்கு நிர்வாகிகள் கொடுத்த முக்கியத்துவம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. கடந்த பிறந்த நாளை விட இந்த பிறந்த நாளில் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு பின்பும் உதயநிதி ஸ்டாலினின் துணை முதல்வர் பதவி திட்டங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் அடுத்த மாதம் முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளிநாடு பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் நிலையில், விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

மாற்றம் 2- அமைச்சரவை மாற்றம்: சீனியர்கள் பலர் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை வளையத்தில் இருப்பதால்.. முதல்வர் ஸ்டாலின் மொத்தமாக ஆட்டத்தை கலைத்து ஆடும் திட்டத்தில் இருக்கிறாராம். இதனால் 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து சில வாரங்களில் தமிழ்நாடு அரசியளிக் மாபெரும் மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சீனியர்களாக இருக்கும் 10 அமைச்சர்களைத்தான் டெல்லி டார்கெட் செய்கிறது. அப்படித்தான் செந்தில் பாலாஜியை டார்கெட் செய்தனர். தற்போது ஏவ வேலுவை டார்கெட் செய்கின்றனர். இடையில் பொன்முடியை டார்கெட் செய்தனர். இப்படி சீனியர்களாக இருக்கும் 10 பேரைத்தான் டார்கெட் செய்து வருகின்றனர்.

சீனியர்களாக இருக்கும் நபர்கள்தான் டெல்லியின் பொறியில் சிக்கி உள்ளனர். இதில் சிலர் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

மாற்றம் 3 - ஐஏஎஸ்: அதேபோல் ஒரே பிரிவில் நீண்ட நாட்களாக இருக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றும் முடிவையும் ஸ்டாலின் எடுத்துள்ளாராம். அடுத்த 3 வாரங்களுக்கு தமிழ்நாட்டில் இதனால் நிர்வாக ரீதியாக, அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் நடக்கும் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+