கோவை, திருப்பூர் வருகை தருகிறார் முதல்வர் ஸ்டாலின்.. ஏற்பாடுகள் தீவிரம்.. டிரோன்கள் பறக்க தடை!
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூலை 22, 23 ஆகிய நாட்களில் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். முதல்வர் வருகைக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக கள ஆய்வுகளை நடத்தி வருகிறார். அந்தவகையில் வரும் ஜூலை 22 ஆம் தேதி கோவை வருகிறார். 23ஆம் தேதி பொள்ளாச்சியில் தலைவர்களின் சிலைகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அதைத்தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வகையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் 22 ஆம் தேதி கோவை விமான நிலையம் வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்புகள் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பின்னர் காரில் செல்லும் முதல்வர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் உடுமலைப்பேட்டையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 22ஆம் தேதி திருப்பூர் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட கோவில்வழி பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். வேலம்பாளையத்தில் புதிய அரசு மருத்துவமனை மற்றும் பேருந்து நிலையத்தை திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின் உடுமலை பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியார், அண்ணா, அம்பேத்கர் சிலைகளையும் திறந்து வைக்கிறார்.
இதையடுத்து 23 ஆம் தேதி பொள்ளாச்சி உடுமலை ரோடு பகுதியில் உள்ள நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டம் நிறைவேற காரணமாக இருந்த பெருந்தலைவர் காமராஜர், சுப்பிரமணியன், மகாலிங்கம் ஆகிய தலைவர்களின் சிலையை திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் பவன் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
மேலும் உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைப்பதோடு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பேச உள்ளார். பின்னர் திருப்பூர், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய இடங்களில் ரோடு ஷோ நடத்துகிறார்.
இதைத்தொடர்ந்து கோவை வரும் முதல்வர் ஸ்டாலின் தனியார் ஹோட்டலில் நடைபெறும் கோவை மாஸ்டர் பிளான் 2041 திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். இந்தக் கூட்டத்தில் அதிகாரிகள், பொதுமக்கள், தொழில்துறையினர், மக்கள் பிரதிநிதிகள் என பல தரப்பினரும் பங்கேற்க உள்ளனர். கோவை வரும் முதல்வர் ஸ்டாலினை வரவேற்க திமுக நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.
முதல்வர் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு வர உள்ள நிலையில் ஊரக மற்றும் மாநகர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி, ட்ரோன் கேமரா, ரிமோட் மூலம் இயங்கும் வான்வெளி சாதனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்












Click it and Unblock the Notifications