எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் ஷாப்பிங் சென்ற ஸ்டாலின்.. சர்ப்ரைஸ் ஆன மக்கள்.. பின்னணியில் உள்ள காரணம்?
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் ஷாப்பிங் செய்திருப்பது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் இன்னும் ஒரு வாரத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அதற்காக ஷாப்பிங் செய்திருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்னும் ஒரு வாரத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். ஏற்கனவே சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு சந்திப்புகள் நடத்தப்பட்டு ரூ.9 லட்சம் வரையில் முதலீடுகளுக்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாகவே தென் மாவட்டங்களிலும் தொழில் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது.

முன்னதாக துபாய், ஜப்பான், ஸ்பெயின், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணித்த ஸ்டாலின், மிகப்பெரிய அளவிலான முதலீடுகளை ஈர்த்தார். இந்த நிலையில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் மீண்டும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். ஆகஸ்ட் 30ஆம் தேதி புறப்படும் ஸ்டாலின், செப்டம்பர் 8ஆம் தேதி தமிழ்நாடு திரும்புகிறார்.
இம்முறை ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான தயாரிப்பு பணிகளில் ஸ்டாலினின் குடும்பத்தினர் இருக்கின்றனர். இந்தப் பயணத்தின் போது ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் உடன் பயணிப்பார்கள் என்று பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் திடீரென எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் ஷாப்பிங் செய்யும் வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. ஸ்டாலினின் பாதுகாவலர்கள் முன் நின்று பொதுமக்களை அப்புறப்படுத்த, ஸ்டாலின் வணக்கம் கூறிக் கொண்டே வேகமாக நடந்து செல்கிறார். ஸ்டாலின் மாலில் ஷாப்பிங் செய்வதை பார்த்த பொதுமக்கள் பலரும் ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.
இதற்கு முன்பாக ஸ்டாலின் சென்னையின் மால்களில் பெரியளவில் ஷாப்பிங் செய்தது கிடையாது. இம்முறை வெளிநாடு செல்ல உள்ளதால், அதற்கு தேவையானவற்றை வாங்க ஷாப்பிங் சென்றிருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. இதனை திமுகவினர் சோசியல் மீடியாவில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications