"ஒற்றைமொழியின் ஆதிக்கம் இருக்காது.." சர்வதேச தாய்மொழி தினத்தில் முதல்வர் ஸ்டாலின் நறுக் ட்வீட்!
சென்னை: ஒற்றை மொழியின் ஆதிக்கமின்றி அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் தங்கள் தாய்மொழியின் சிறப்புகளை கொண்டாடி வருகிறார்கள். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் உறுதியேற்பை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில் உலகத் தாய்மொழி நாளில், தங்கள் மொழிகளைப் பாதுகாக்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகியருக்கு எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

தியாகம்
அவர்களது தியாகத்தில் இருந்து பெறும் உணர்வெழுச்சி கொண்டு, ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி - அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் அனைவருக்கும் சமமான இந்தியாவைக் காண நாம் அனைவரும் உறுதியேற்போம் என தெரிவித்துள்ளார்.

ஒற்றை மொழி
இதில் ஒற்றை மொழியின் ஆதிக்கம் என முதல்வர் எந்த மொழியை சொல்கிறார் என சமூகவலைதளங்களில் விளக்கங்களும் விவாதங்களும் நடைபெறுகின்றன. மத்திய அரசின் மும்மொழி கொள்கையில் இந்தி, ரயில் நிலையம், விமான நிலையம், மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விண்ணப்பங்கள், ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டவற்றில் இந்தி மொழி பயன்படுத்தப்படுகிறது.

அலுவல்
மற்ற மாநிலத்தின் அலுவல் மொழியில் படித்திருந்தாலும் அவர்களது வாய்ப்பை கல்வி, வேலைவாய்ப்புகளில் வடமாநிலத்தவர்கள் தட்டி பறிக்கும் விதமாக புதிய நுழைவுத் தேர்வுகள் உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. சொல்ல போனால் அந்தந்த மாநில மொழிகள் இருட்டடிப்பு செய்யப்பட்டு இந்தி திணிப்பு செய்வதாகவும் மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த இந்தி திணிப்பை எதிர்த்து பெரும் போராட்டங்கள் நடந்துள்ளன.

எந்த மொழியாக இருந்தாலும் ஆதிக்கம் வேண்டாம்
இந்த நிலையில் எந்த மொழியாக இருந்தாலும் ஒரு மொழி மட்டுமே ஆதிக்கம் செலுத்தப்படாமல் அனைத்து சமமாக பாவிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின், மறைமுகமாக இந்தி திணிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications