விஜய்யின் அரசியல் வருகை.. ஸ்டாலினிடம் நேரடியாகக் கேட்ட கேள்வி.. முதல்வர் கொடுத்த ரியாக்‌ஷன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய கருத்துக்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. தவெக மற்றும் விஜய் தொடர்பாக எந்தக் கருத்தையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய ஸ்டாலின், பேச்சைக் குறைத்து செயலில் நமது திறமையை காட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

2030ல் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கு வைத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பணியாற்றி வருகிறது. இதற்காக தொழில்துறையில் முதலீடுகளை ஈர்க்க கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கேற்ப முதலீட்டாளர் மாநாடு, முதலீட்டாளர்களுடன் சந்திப்பு என்று நடத்தி வருகின்றன.

CM Stalin vs Vijay

அந்த வகையில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை ஐரோப்பிய பயணத்தை தொடங்கி உள்ளார். அதற்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ஒரு வாரம் பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறேன்.

திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை ரூ.10.62 லட்சம் கோடியில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 929 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலமாக 32.81 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வாய்ப்புகளை உருவாக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று தெரிவித்தார். பின் ஸ்டாலினிடம் சி வோட்டர் கருத்துக்கணிப்பு மற்றும் புதியக் கட்சிகள் கூட்டணியில் இணைவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ஸ்டாலின், புதிய கட்சிகள் திமுக கூட்டணிக்கு வருகிறதோ இல்லையோ புதிய வாக்காளர்கள் வருகின்றனர். அதேபோல் கருத்துக் கணிப்புகள் என்ன சொன்னாலும், அதையெல்லாம் மிஞ்சி திமுக வெற்றி பெறும் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு முதல்வர் ஸ்டாலின், விஜய் அரசியல் வருகை குறித்து எந்த கருத்தும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான் அதிகம் பேச மாட்டேன். இதற்கு பேச வேண்டிய அவசியம் இல்லை. பேச்சை குறைத்து செயலில் நமது திறமையை காட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். விஜய் குறித்து கேள்வி எழுந்த போது, ஸ்டாலின் கொஞ்சம் கடுமையாக பதில் அளித்தார்.

நேற்று வெளியான சி வோட்டர் கருத்துக்கணிப்பில் விஜய்யின் அரசியல் வருகை திமுக கூட்டணிக்கு எதிரான வாக்குகளை பிரிக்கும் என்று கூறி இருந்தது. அதனால் திமுக கூட்டணிக்கு சாதகம் ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய்யின் அரசியல் வருகை தொடர்பாக ஸ்டாலின் கருத்து சொல்லாமல் தவிர்த்திருப்பது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+