டெல்லியிலிருந்து வரும் முன்.. ரிப்போர்ட் என் டேபிளில் இருக்கணும்! கண்கள் சிவந்த ஸ்டாலின்! என்னாச்சு?
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்துள்ள நிலையில் முக்கியமான ஆராய்ச்சி ஒன்றில் திமுக இறங்கி உள்ளதாம்.
கடந்த முறை தமிழ்நாடு - புதுவை சேர்ந்து 39 இடங்களில் வென்றது திமுக. இந்த முறையும் தமிழ்நாடு லோக்சபா தேர்தலில் திமுக இமாலய வெற்றி பெற்றுள்ளது. புதுச்சேரி உட்பட 40 இடங்களில் 40லும் திமுக வெற்றி பெற்றுள்ளது. . பாஜக தென்சென்னை, நெல்லை தவிர எங்கும் கடும் போட்டி கொடுக்கவில்லை.

பாஜக நெல்லையில் முன்னிலை வகித்த நிலையில் அங்கே பின்னடைவை சந்தித்தது. கடந்த தேர்தலில் வென்ற ஒரு இடத்தை.. அதாவது தேனியையும் இழந்து அதிமுக படுதோல்வி அடைந்து உள்ளது. தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்துள்ள நிலையில் முக்கியமான ஆராய்ச்சி ஒன்றில் திமுக இறங்கி உள்ளதாம்.
நேற்று ஆய்வு: அந்த வகையில், திமுக தரப்பில் நேற்று இரவு முக்கியமான ஒரு சம்பவம் நடந்திருக்கிறது; அதன்படி, தமிழகத்தில் 40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றிப் பெற்றிருந்தாலும் முந்தைய தேர்தல் முடிவுகளை கணக்கிடும் போது வாக்கு சதவீதம் திமுகவுக்கு குறைந்திருப்பதாகவே தகவல் சொல்லப்படுகிறது.
உத்தரவு: இந்த நிலையில், தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளிலும் திமுக பெற்ற வாக்குகள், எதிர்க்கட்சிகள் பெற்ற வாக்குகள், எந்தெந்த தொகுதிகளில் திமுக வலிமையான வாக்குகளை வாங்கியுள்ளது? எந்தெந்த தொகுதிகளில் திமுக சரிவை சந்தித்திருக்கிறது ? சரிவு ஏற்பட்டிருந்தால் என்ன காரணம் ? உள்ளிட்டவைகளை ஆராய்ந்து முழுமையான ரிப்போர்ட் ஒன்றை தரச் சொல்லி குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார் ஸ்டாலின்.
அதே போன்ற ஒரு ரிப்போர்ட்டை கேட்டு உளவுத்துறை உயரதிகாரிகளுக்கும் உத்தரவிட்டு ள்ளார். டெல்லி சென்று திரும்புவதற்குள் இந்த ரிப்போர்ட்டை தயார் செய்யும் பணிகளில் இரு தரப்பினரும் மும்முரமாகியிருக்கிறார்கள். டெல்லியிலிருந்து திரும்பியதும் தம்மிடம் ஒப்படைக்கப்படும் அறிக்கைகளை ஆராய்ந்து சில முடிவுகளை ஸ்டாலின் எடுக்கவிருப்பதாகவும் அறிவாலயத் தரப்பில் தகவல் கிடைக்கின்றன.
மாற்றம்: அதன்படி திமுகவில் பின்வரும் மாற்றங்கள் தேர்தல் ரிசல்ட் வந்த நிலையில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை மாற்றம் இருக்கும். 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து அமைச்சரவை மாற்றம் இருக்கும்.
புதிய அமைச்சர்கள் ஆட்சியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. இளம் அமைச்சர்கள் பெரும்பாலும் ஆட்சி அதிகாரத்தில் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன. பெரிய அளவில் மாவட்ட செயலாளர்கள் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக அமைச்சரவை மாற்றப்படலாம். தமிழ்நாட்டில் பல அரசியல் மாற்றங்கள் நடக்க போகிறது. திமுக ஆட்சி கட்சியாக இருக்கிறது. வலிமையான கூட்டணி வைத்துள்ளனர். இதனால் ஒரு இடங்களில் கூட தோற்கவில்லை.
திமுக சின்னம் போட்டியிட்ட இடங்களில் பிரச்சனை இல்லை. ஆனால் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட இடங்களில்தான் வாக்கு குறைந்துள்ளது. இங்கெல்லாம் வேலை பார்த்தவர்கள் மீது ஆக்சன் எடுக்க ஸ்டாலின் ஆலோசனை செய்து வருகிறாராம். இதை மனதில் வைத்தே தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து முழுமையான ரிப்போர்ட் ஒன்றை தரச் சொல்லி குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார் ஸ்டாலின்.
மேலும் ஒரு ரிப்போர்ட்டை கேட்டு உளவுத்துறை உயரதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications