நோட் பண்ணேன்.. விடாதீங்க.. அமைச்சர்களுக்கு வீடியோ காலில் எச்சரித்த ஸ்டாலின்.. என்ன நடந்தது?
சென்னை: நேற்று ஆன்லைன் வழியாக நடந்த திமுக கூட்டத்தில் அமைச்சர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை முதல்வர் ஸ்டாலின் அளித்துள்ளாராம்.
லோக்சபா தேர்தலுக்கான ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்கு இடையில் நேற்று திமுக மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்களுடன் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்தார். காணொலியில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்களும் பங்கேற்றனர்.

ஸ்டாலின் ஆலோசனை; இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பிப்.26 முதல் 'இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் வீடுவீடாக பரப்புரை ஆரம்பம் ஆகிறது. வீடு வீடாக பிரச்சாரத்தை தொடங்க வேண்டும். 4 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுக்கு வந்துள்ளன பாஜகவின் அநீதி, திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் சேர்க்க வேண்டும்.
அனைவரையும் காப்பாற்றும் அரசாக நம்முடைய அரசு செயல்படுகிறது என்பதை நமது சாதனைகள் வழியாகப் பரப்புரைச் செய்வோம். மாவட்டக் கழகச் செயலாளர்கள் - தொகுதிப் பொறுப்பாளர்கள் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டிய அவசர அவசியம் காரணமாகத்தான் நேற்று சட்டமன்றம் முடிந்தவுடன் காணொலி வாயிலாக நடத்துகிறோம்.
நான் சட்டமன்றத்தில், ஒரு அழைப்பு விடுத்தேன். நம்மை எல்லாம் ஆளாக்கிய நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் நினைவிடமும், பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடமும் வருகிற 26-ஆம் தேதி, மாலை 7 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் திறக்கப்படுகிறது.
தாய் தமிழ்நாட்டையும் - நம் கழகத்தையும் காத்த தலைவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றியின் அடையாளமாக மிகப் பிரமாண்டமாக இந்த நினைவகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
விழாவாக இல்லாமல், நிகழ்ச்சியாக நாம் நடத்துவதால், அந்நிகழ்வில் நீங்கள் அனைவரும் தவறாது வருகை தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்து, உங்கள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சி கலந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதிவாரியாக நடைபெற்ற கூட்டங்கள் அனைத்தும் பெரும் வெற்றியடைந்துள்ளன. மிகப் பிரமாண்டமாக நடத்திக் காட்டிவிட்டீர்கள். பெரும்பாலான கூட்டங்களை டிவியில் பார்த்து பிரமித்தேன்.
அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே மாதிரியாக மேடை அமைக்கப்பட்டு, எல்.ஈ.டி திரைகளுடன் பிரம்மாண்ட கூட்டங்களாக இருந்தன. மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள், டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட கூட்ட புகைப்படங்களும் மலைப்பை ஏற்படுத்தியது. லோக்சபா தேர்தலுக்கு பிறகு திமுகவிலும், அரசியலிலும் பலமாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
இதனை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பொறுப்பு அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைச்சர்களுக்கு எச்சரிக்கை; இப்படி அமைச்சர்களை பாராட்டிய அதே வேளையில் அமைச்சர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை முதல்வர் ஸ்டாலின் அளித்துள்ளாராம்.
அதன்படி மேற்கண்ட கூட்டங்களில் சில அமைச்சர்கள் பிரதமர் மோடியை, பாஜகவை விமர்சிக்காமல் மேம்போக்காக பேசி உள்ளனர். மத்திய அரசு மீது அச்சம் இருப்பது போல பயந்தபடி சிலர் பேசி உள்ளனர். இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களிடம்.. உங்களில் சிலர் மேடைகளில் பெரிதாக பாஜகவை விமர்சிக்காமல் இருக்கிறீர்கள். உங்களுக்கு ஏதாவது அச்சம் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள்.
ஆனால் அதற்காக பாஜக எதிர்ப்பில் இருந்து பின்வாங்க வேண்டாம். முன்பு எப்படி மோடியை, பாஜகவை விமர்சனம் செய்தீர்களோ அப்படியே செய்யுங்கள். இதில் உறுதியாக இருங்கள். மோடி எதிர்ப்பில் இருந்து பின்வாங்கவே வேண்டாம், என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளாராம்.
தொடர் பேச்சு: மேலும் பேசிய ஸ்டாலின், இக்கூட்டங்கள் பரவலாக மாநிலம் முழுவதும் கழகத்தினரை உற்சாகப்படுத்தியிருக்கின்றன. தேர்தல் பணிகளைப் பொறுத்தவரை, நாம் மிக வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதியிலும் நாம் தான் முழுமையான வெற்றி பெறுவோம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அந்த வெற்றி மகத்தானதாக இருக்க வேண்டும். நாம் பெறும் வாக்குகள் அபரிமிதமாக இருக்க வேண்டும்.
நம்முடைய ஒவ்வொரு திட்டம் பற்றியும் படித்துவிட்டு, எளிமையாகப் பரப்புரைச் செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பாற்றும் அரசு, நமது அரசு என எளிமையாகப் புரியும் வகையில் பரப்புரை செய்ய வேண்டும். இவை அனைத்தையும் இப்போது நாம் தீர்மானமாகப் போட உள்ளோம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications