பொள்ளாச்சி வழக்கு! மானமிருந்தால் வெட்கி தலைகுனியட்டும்! "சார்"களுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
சென்னை: பொள்ளாச்சி வழக்கில் பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது!

அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த 'சார்'கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை காரில் பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கி 9 பேர் சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான பெண்ணின் அலறல் ஆடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மணிவண்ணன், பைக் பாபு, அருண்குமார், அருண்குமார், அருளானந்தம், ஹோரோநிமல் பால், வசந்தகுமார், சதீஷ், திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்தார். அதன்படி அவர்களுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் ரூ 85 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்டனை பெற்ற 9 பேரும் உயர்நீதிமன்றத்திலோ அல்லது உச்சநீதிமன்றத்திலோ மேல்முறையீடு செய்யலாம். வழக்கின் தன்மையை பொருத்து அந்த நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கலாம்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். அவ்வறு செய்யும் போது சென்னை உயர்நீதிமன்றம், டெல்லி உச்சநீதிமன்றம் வழக்கின் தன்மையை பொருத்து தீர்ப்பு வழங்கப்படலாம்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications