ஆக.,22 வேண்டாம்.. ஸ்டாலினின் அமெரிக்க பயணம் 5 நாட்கள் ஒத்திவைப்பு.. ஆகஸ்ட் 27க்கு திடீர் மாற்றம்
சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வரும் 22ம் தேதி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது அமெரிக்க சுற்றுப்பயணத்துக்கான பயண தேதி 5 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல்வர் ஸ்டாலின் வரும் 27ஆம் தேதி அமெரிக்கா புறப்படுகிறார்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நம் மாநிலத்துக்கு தேவையான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக கடந்த 3 ஆண்டுகளில் அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

வரும் 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
இதன் ஒருபகுதியாக கடந்த ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் ரூ. 6 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்தது. இதுதவிர வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து தொழிலதிபர்களை சந்தித்து வருகிறார்.
அந்த வகையில் துபாய், பிரிட்டன், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய நாடுகளுக்குச் சென்ற முதல்வர், முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார். அந்த வரிசையில் மீண்டும் தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ளதாக கூறப்பட்டது.
அதாவது முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 22ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளதாகவும், 15 நாட்கள் அங்கு தங்கி தொழில் முதலீடுகளை அவர் ஈர்க்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது பயண தேதியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க சுற்றுப்பயணம் என்பது 5 நாட்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 22ம் தேதிக்கு பதில் முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 27 ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்ல உள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலமாக அவர் அமெரிக்கா செல்ல உள்ளார். அமெரிக்காவில் அவர் பல முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள், உயரிய பொறுப்புகளில் இருப்பவர்களை சந்தித்து தொழில் முதலீடு தொடர்பாக பேச உள்ளார். குறிப்பாக கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை முதல்வர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சில நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அமெரிக்கா வாழ் தமிழர்களையும் சந்தித்து அவர்களுடனும் உரையாற்ற உள்ளார். இருப்பினும் இந்த திடீர் அமெரிக்க பயணம் தொடர்பான தேதி மாற்றத்துக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா












Click it and Unblock the Notifications