நீங்கள் சொல்வது ஏற்புடையதாக இல்லை.. மேகதாது திட்டத்தை கைவிடுங்கள்.. எடியூரப்பாவுக்கு ஸ்டாலின் கடிதம்
சென்னை: மேகதாது அணை கட்டுவதை கைவிடுங்கள் என கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
Recommended Video
மேகதாது அணை தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கர்நாடகா முதல்வர் எடியூரப்பா நேற்று எழுதிய கடிதத்திற்கு ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
அவர் எழுதிய கடிதத்தில் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிடுங்கள். மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி நீர்வரத்து பாதிக்கப்படும். கபிணி, கேஆர்எஸ் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் அந்த நீரும் தமிழகம் வருவதில் தடை ஏற்படும்.

காவிரி ஆற்றின் பிரதான நீர்
மேலும் காவிரி ஆற்றின் பிரதான நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர் வரத்தும் மேகதாது அணையால் தடைபடும். மேகதாது அணை தமிழக விவசாயிகள் நலனை பாதிக்காது என கர்நாடகா அரசு கூறுவதை ஏற்க முடியாது. பெங்களூரு குடிநீருக்காக அணை கட்டப்படுகிறது என்பதும் ஏற்புடையதாக இல்லை.

கர்நாடகா அரசு
ஏற்கெனவே பெங்களூர் நகருக்கு போதுமான குடிநீர் ஆதாரங்கள் கர்நாடகா அரசு பெற்றுள்ளது. 4.75 டிஎம்சி குடிநீரை பயன்படுத்துவதற்காக 67.16 டிஎம்சி சேமிப்பு திறன் கொண்ட அணை தேவைப்படுவதாக கூறுவகையும் ஏற்க முடியாது என ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு
மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் முழு ஒத்துழைப்பை தருமாறு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு கர்நாடகா முதல்வர் எடியூரப்பா கடிதம் நேற்று எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் மேகதாதுவால் இரு மாநிலங்களுக்கும் பெரும் பயன் ஏற்படும்.

விவசாயிகள் நலன்
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாது. இந்த திட்டத்தை எதிர்க்காமல் இருக்க தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தலாம் என எடியூரப்பா கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்திற்குத்தான் ஸ்டாலின் பதிலடி கொடுத்திருந்தார்.
-
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications