அட்டூழியம் செய்யும் இலங்கை கடற்படை.. மத்திய அமைச்சருக்கு அவசர கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுத்திடவும், சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும் வலுவான தூதாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு இன்று (29.09.2024) எழுதியுள்ள கடிதத்தில், இராமேஸ்வரம் மீன்பிடித் தளத்தில் இருந்து IND-TN-10-MM-411 மற்றும் IND- TN-10-MM-544 பதிவு எண்களைக் கொண்ட இரண்டு படகுகளில் 28.09.2024 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்து நிலையில், இன்று 28.19.2024 நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படைமினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தனது கடிதத்தில் கவலைபடத் தெரிவித்துள்ளார்.

MK Stalin Tamil nadu fishermen

தமிழ்நாட்டிச் சேர்ந்த மீளவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவ சமுதாயத்தினரிடையே மிருந்த துயரத்தையும் அவர்களது வாழ்வில் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இந்த சிக்கலான பிரச்சினையை தூதரக ரீதியாக தீர்த்திட உறுதியான மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தான் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளதாகவும், நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, 27.09.2004 அன்று மாண்புமிகு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் சமர்ப்பித்த கோரிக்கைகளில் ஒன்றாக இந்தக் கோரிக்கையையும் வலியுறுத்தியுள்ளதாகவும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதை நடுக்கவும், சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் இலங்கை அரசிடமிருந்து டனடியாக விடுவிக்கவும், வலுவான மற்றும் பயனுள்ள தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+