ஹஜ் புனிதப் பயணம்; சென்னையிலிருந்து விமானங்களை இயக்க வேண்டும்; பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹஜ் புனித யாத்திரைக்கான விமானங்களை வழக்கம் போல் சென்னையிலிருந்து இயக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

2022-ம் ஆண்டுக்கான ஹஜ் பயணத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ள மத்திய அரசு, 21 இடங்களிலிருந்து இயக்கப்பட்ட ஹஜ் பயணிகளுக்கான விமானங்கள் இனி 10 இடங்களில் இருந்து மட்டுமே இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

CM Stalin wrote letter to pm modi about Hajj flights should operated from chennai

அந்த 10 இடங்களில் சென்னை விமான நிலையம் புறக்கணிக்கப்பட்டுள்ள சூழலில், அதற்கு வைகோ உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் பின்வருமாறு;

2019-ம் ஆண்டில் தமிழகம், புதுச்சேரி, மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலிருந்து 4,500-க்கும் மேற்பட்ட ஹஜ் யாத்ரீகர்கள் சவுதி அரேபியாவின் ஜித்தாவுக்கு சென்று வந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா காரணமாக கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளும் ஹஜ் பயணம் ரத்து செய்யப்பட்டிருந்த சூழலில், தற்போது தமிழகத்தை சேர்ந்த ஹஜ் யாத்ரீகர்கள் விமானம் ஏறும் இடமாக கேரளாவின் கொச்சின் விமான நிலையம் குறிப்பிடப்பட்டிருப்பது தமிழகத்தை சேர்ந்த யாத்ரீகர்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கும் எனக் கூறியிருக்கிறார்.

மேலும், இஸ்லாமிய சமூகத்தினர், பல்வேறு அரசியல் குழுக்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக இது குறித்து ஏராளமான கோரிக்கைகளை பெற்றுள்ளதாக தனது கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஹஜ் யாத்திரை பெரும்பாலான யாத்ரீகர்களுக்கு சவாலாக இருப்பதால் சென்னையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொச்சின் நகரை புறப்படும் இடமாக அறிவிக்கப்பட்டதை மாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனவே மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்து இந்தியாவின் நான்காவது பெரியநகரமாக விளங்கும் சென்னையிலிருந்து வழக்கம் போல் ஹஜ் பயணகளுக்கான விமானங்களை இயக்க தொடர்புடைய துறையினருக்கு அறிவுறுத்துமாறு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருக்கிறார்.

சென்னையை தவிர மும்பை, பெங்களூரு, டெல்லி, உள்ளிட்ட பெருநகரங்கள் எல்லாம் ஹஜ் பயணிகளுக்கான விமானம் புறப்படும் இடங்களின் பட்டியலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+