"இதை" பற்றி பேசுவீங்களா.. எல்லாரும் குமுறுகிறார்களே.. முதல்வரிடம் டவுட் கேட்ட பாஜக காயத்ரி!
முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி உள்ளார் காயத்ரி ரகுராம்
சென்னை: "வெள்ளை பலகை கொண்ட நகர பேருந்தில் மட்டுமே இலவசம் என்கிறீர்கள், பெண்களை அந்த பேருந்தை எதிர் பார்த்து காத்துக்கொண்டே இருக்கும் நிலை உள்ளது. முதல்வர் இது பற்றி பேசுவீர்களா?" என்று பாஜகவின் காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பி உள்ளார்.
முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முக ஸ்டாலின் எடுத்து வருகிறார்..
தொடர்ந்து பல்வேறு மக்கள் நல நடவடிக்கைகளையும் திமுக அரசு எடுத்து வருகிறது. ஒருபக்கம் அறிவிப்புகள், மறுபக்கம் அரசியல் நாகரீகம், இன்னொரு பக்கம் மாநில உரிமைகள் என நாலாபக்கமும் கவனத்தை செலுத்தி ஆட்சியை நடத்தி வருகிறது.

கேள்வி
ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலின் அறிவித்த மிக முக்கியமான அறிவிப்பு, பெண்கள் அரசு நகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்பதுதான்.. அது தற்போது நடைமுறையிலும் உள்ளது. .. இப்படி எண்ணற்ற திட்டங்களையும் அறிவிப்பையும் ஸ்டாலின் கொண்டு வந்தாலும், அதையும் சிலர் விமர்சித்தே வருகின்றனர்..

நீட் விவகாரம்
அதில் ஒருவர்தான் பாஜகவின் காயத்ரி ரகுராம். நீட் விவகாரத்துக்கு திமுக அரசை கேள்வி மேல் கேள்வி எழுப்பியவர், இந்த இலவச பஸ் பயண அறிவிப்பு குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து நான்கைந்து ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.. அதில் முக்கிய 2 ட்வீட்களில் முதல்வருக்கு கேள்வியும் எழுப்பு உள்ளார்.

எண்ணிக்கை
"வெள்ளை பலகை கொண்ட நகர பேருந்தில் மட்டுமே இலவசம் என்கிறீர்கள், பெண்களை அந்த பேருந்தை எதிர் பார்த்து காத்துக்கொண்டே இருக்கும் நிலை உள்ளது. முதல்வர் இது பற்றி பேசுவீர்களா?.. வெள்ளை பலகை மட்டுமே இலவசம்.. ஆனாலும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. வெள்ளை பலகை பஸ் ஒரு முறை வரும், அவசரமாக பஸ்ஸைப் பெற முடியாது.

குமுறல்
நீங்கள் பஸ் டிப்போவிலிருந்து பஸ் எடுக்க வேண்டும். ஆனால் தாமதமாகிவிடும் இது வேலைக்கு செல்லும் பெண்களின் குமுறல் என காயத்ரி ரகுராம் தெரிவித்து, இதற்கெல்லாம் என்ன செய்வதாக இருக்கிறீர்கள்" என்ற முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வியும் எழுப்பியுள்ளார். இதற்கு பலரும் திரண்டு வந்து காயத்ரிக்கு கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.. மேலும் சிலர், நீங்க எந்த பஸ்ஸில் போனீங்க? எந்த பஸ்ஸிற்கு காத்திருந்தீர்கள்? என்று கேள்வியும் கேட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications