சாம்பார் வாளியுடன் ஸ்டாலின்.. "தலைவா வெல்கம்".. முதல்வரின் கோவை விசிட்.. வைரலாகும் 2 வகை ஹேஷ்டேக்
வெல்கம் ஸ்டாலின் ட்விட்டரில் வைரலாகி கொண்டிருக்கிறது
சென்னை: தமிழக முதல்வரின் இன்று கோவை பயணமானது, மிகப்பெரிய எதிர்பார்ப்பை தமிழக அரசியல் களத்தில் கிளப்பி விட்டு வருகிறது. ஒருபக்கம் #KovaiWelcomesStalin என்ற ஹேஷ்டேக், மற்றொரு பக்கம் #GoBackStalin என்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
Recommended Video
கோவையில் இன்று நடக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்..
கோவை வஉசி மைதானத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியும் பேசி வருகிறார்.

முதல்வர் பங்கேற்பு
இதற்கு பிறகு, கோவையில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, திருப்பூரில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார்... திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில் கலந்து கொண்டு அரசு கட்டிடங்களை திறந்து வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்... பயனாளிகளுக்கும் அரசு நல உதவிகளை வழங்குகிறார்.. நாளை காலை 11 மணிக்கு கொடிசியா அரங்கில் நடக்கும் முன்னணி நிறுவனங்களின் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.

கொங்கு மண்டலம்
முதல்வரின் இந்த கோவை வருகையானது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. காரணம், கொங்குவில் திமுக வலுவிழந்து வருவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், மீண்டும் திமுகவின் செல்வாக்கை தூக்கி நிறுத்துவதற்கான முயற்சியில் கட்சி மேலிடம் மும்முரம் காட்டி வருகிறது.. இன்றைய தினம், முதல்வர் கோவை வரும்போது, ஒரு லட்சம் பேர் திரண்டு வந்து அவருக்கு வரவேற்பு தர வேண்டும் என்று செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் அறிவித்ததுகூட, கட்சியின் பலத்தை கொங்குவில் உயர்த்தி காட்டுவதற்காகத்தான் என்று கிசுகிசுக்கப்பட்டது.

வருக.. வருக
அதன்படியே இன்றைய தினம் முதல்வரின் கோவை பயணம் அமைந்து வருகிறது.. ஆனால், இந்த பயணமானது இருவேறு தாக்கங்களை சமூக வலைதளங்களில் ஏற்படுத்தி வருகிறது.. அதன்படி, #KovaiWelcomesStalin என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. #KovaiWelcomesStalin என்ற ஹேஷ்டேக்கின் கீழ் முதல்வருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்...

ஏன் வருகிறார்?
"கொரோனா காலத்தில் நிவாரண நிதியாக 4000 ரூபாய் வழங்கி மக்களின் துயர் போக்கிய முதல்வரே! வருக! வருக! கோவை மாநகருக்கு வருகை தரும் சங்கிகளின் சிம்பு சொப்பனமே வருக வருக. கோவை மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகைதரும் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களே வருக வருக" என்று வரவேற்று வருகின்றனர்.

பாஜக
மற்றொரு பக்கம், முதல்வரின் கோவை பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #GoBackStalin என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்காகி வருகிறது... இதற்கான ஏற்பாட்டை நேற்றிரவே நெட்டிசன்கள் துவங்கி விட்டதாக தெரிகிறது.. "அவர் கோவை வருகிறாரா? எதுக்கு வருகிறார்?" என்று சில பாஜகவினர் கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு அவர்களே சில பதில்களையும் தெரிவித்து வருகின்றனர்.

திமுக
"உள்ளாட்சி தேர்தல் வர உள்ளதால் நலத்திட்ட உதவிகள் வழங்க வருகிறார், சென்னையில் சாம்பார் வாளியுடன் வந்து மக்களை ஏமாற்றிவிட்டு இப்போது தேர்தலுக்காக கோவை மக்களை ஏமாற்ற வருகிறார், விடியாத அரசின் முதலமைச்சரே திரும்பி போ" என்று அதில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் திமுகவினர் கொந்தளித்து பதிலடி தந்து வருகிறார்கள்.. இப்படி இருவேறு ஹேஷ்டேக்கினால் ட்விட்டர் களமே அனலடிக்கிறது...!
-
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications