"ஆங்! டிக்கெட் டிக்கெட்.." டீலக்ஸ் பஸ்ஸில் 4 ஆக மடித்து பெண் கொடுத்த மனுவை பாக்கெட்டில் போட்ட விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய், கோயம்பேட்டில் வெற்றி பயணத்தை தொடங்கிய போது பேருந்தில் பெண் ஒருவர், 4ஆக மடித்துக் கொடுத்த மனுவை வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்டார். அது போல் ஒவ்வொரு பயணிக்கும் கன்டக்டர் போல் அவரே டிக்கெட்டை கொடுத்தார்.

மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டத்தை விரிவுப்படுத்தி வெற்றிப் பயணம் என்ற திட்டத்தை சென்னை கோயம்பேட்டில் முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.

joseph Vijay vetri payanam

அரசு பேருந்துகளில் ஏறிய முதல்வர் விஜய், பேருந்துகளில் பயணித்த பெண்களுக்கு கட்டணமில்லா டிக்கெட்டை அவரே வழங்கினார். பின்னர் அங்கிருந்த பெண்கள், விஜய்க்கு சாக்லேட் கொடுத்தனர். அதை பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.

வெற்றி பயண திட்டம்

வெற்றி பயண திட்டம் மூலம் முதல் கட்டமாக மாநகரம், நகரங்களில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமின்றி எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசு பேருந்துகளிலும் மகளிர் இலவசமாக பயணிக்கலாம்.

மாவட்டங்களுக்கு இடையே பயணம்

கூடுதலாக மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர், மலை பகுதிகளில் சாதாரண கட்டண பேருந்துகளிலும் மகளிர் கட்டணமின்றி பயணிக்கலாம். இந்த திட்டத்தின் மூலம் மாநகர, நகர்ப்பகுதி, புறநகர், சாதாரண பேருந்துகள், 40 கி.மீ.க்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரண பேருந்துகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

யாரெல்லாம் பயன் பெறலாம்?

இதற்கு வருமான உச்சவரம்போ, பயண எண்ணிக்கை கட்டுப்பாடுகளோ கிடையாது. இந்த சேவையில் திருநங்கைகளும் இலவசமாக பயணிக்கலாம். இதை செயல்படுத்த ஆண்டுதோறும் ரூ 6000 கோடி செலவு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 7 அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் மொத்த 18,413 திட்டமிடப்பட்ட பேருந்துகளில் 12,692 பேருந்துகள் (69%), மொத்தம் 1,94,649 நடைகளில் , 1,65,312 நடைகள் (85%) இயக்கப்படும். நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் மகளிர் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள்.

மதுராந்தகம், தாராபுரத்தில் இல்லை

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டசபை தொகுதிகளை தவிர தமிழகம் முழுவதும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. முன்னதாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த காந்தியடிகளின் படத்திற்கு முதல்வர் விஜய் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

முதல்வர் விஜய்

இதையடுத்து அங்கு தயாராக இருந்த இரு பேருந்துகளுக்குள் முதல்வர் விஜய் சென்றார். அங்கு ஓட்டுநர், நடத்துநர்களிடம் நலம் விசாரித்துவிட்டு நடத்துநரிடம் இருந்த டிக்கெட் கொடுக்கும் கருவியை வாங்கி ஒவ்வொரு இருக்கைக்கும் சென்று பெண்களுக்கு பூஜ்ஜியம் ரூபாய் என குறிப்பிடப்பட்டிருக்கும் டிக்கெட்டை கொடுத்தார்.

கைகுலுக்கி வாழ்த்திய பெண்கள்

அப்போது விஜய்யை பார்த்த மகிழ்ச்சியில் பெண்கள் கைகுலுக்கி வாழ்த்தினர். சிலர் செல்பி எடுக்க முயன்றனர். அப்போது ஒரு பெண் திருஷ்டி கழித்தார். உடனே விஜய்யும் அந்த பெண்ணுக்கு திருஷ்டி கழித்தார்.

பெண் கொடுத்த மனு

இதையடுத்து அந்த பெண்ணுக்கு டிக்கெட் கொடுத்த போது, 4-ஆக மடிக்கப்பட்டிருந்த மனுவை கொடுத்தார். அதை வாங்கிய முதல்வர் விஜய் தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். இதையடுத்து அங்கிருந்த பெண்கள் கொடுத்த சாக்லேட்டையும் சிரித்தபடியே வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.

டிக்கெட்

டிக்கெட் கொடுத்து முடித்ததும் சீட்டில் அமர்ந்து, பெண்களிடம் நலம் விசாரித்தார். அந்த பேருந்தில் வந்த ஒரு பெண்ணுக்கு பிறந்தநாள் என சொன்னதும், "ஹாய் மா உங்களுக்கு பிறந்தநாளா? வாழ்த்துகள்" என கூறிவிட்டு சாக்லேட்டை எடுத்துக் கொடுத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+