2029 பிரதமர் வேட்பாளரா விஜய்? தேசிய வெற்றி கழகம் கட்சியை தொடங்க திட்டம்? PR வியூகத்தின் பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில நாட்களாக வட மாநில சமூக வலைதளங்களில் ஒரு புதிய விஷயம் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் பிகார் போன்ற இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பக்கங்களில், தமிழக முதல்வர் விஜய் பற்றிய வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.

அங்குள்ள நெட்டிசன்கள் விஜய்யை ஒரு சிறந்த தலைவராகவும், அதிரடி முடிவுகளை எடுக்கும் முதல்வராகவும் காட்டும் வகையில் இந்த வீடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இது சாதாரணமான வீடியோக்கள், இயல்பாக விஜய்யை பிடித்து போய் இவர்கள் இந்த வீடியோ போட்டார்கள் என்று பார்க்கப்பட்டாலும், இதற்குப் பின்னால் ஒரு பெரிய அரசியல் திட்டம் இருப்பதாகப் பேசப்படுகிறது.

CM Vijay

தேசிய கட்சியாக மாறும் திட்டமா?

தமிழகத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, தனது அரசியல் பயணத்தை மாநில அளவோடு நிறுத்திக்கொள்ள விஜய் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. கட்சியை தேசிய அளவில் கொண்டு செல்ல தமிழக வெற்றிக் கழகம்'என்ற பெயரை மாற்றி, தேசிய வெற்றி கழகம் அல்லது நேஷனல் டிரையம்ப் பார்ட்டி என அறிவிக்க ஆலோசனைகள் நடப்பதாகக் கூறப்படுகிறது.

2029-ல் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதே இதன் முக்கிய இலக்கு என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அமைச்சர்களின் பேச்சு தரும் சிக்னல்

இந்தத் தகவல்களுக்கு வலு சேர்க்கும் வகையில், தவெக அமைச்சர்களின் சமீபத்திய பேச்சுகளும் அமைந்துள்ளன. மத்திய அரசில் தென்னிந்தியாவின் பங்கு முக்கியமானது. அடுத்த பிரதமர் தெற்கில் இருந்துதான் வர வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார்.

அவரைத் தொடர்ந்து மற்றொரு அமைச்சரான சரத்குமார், 2029-ல் விஜய்தான் நாட்டின் அடுத்த பிரதமர் என்று வெளிப்படையாகவே கூறினார். அமைச்சர்களே அடுத்தடுத்து இவ்வாறு பேசுவது, கட்சி தேசிய அரசியலை நோக்கி நகர்வதை வெளிப்படுத்துவதாக உள்ளது.

வட இந்தியாவில் நடக்கும் பி.ஆர் வேலைகள்

வட மாநில மக்களிடம் விஜய்யைப் பற்றிய நல்ல எண்ணத்தை உருவாக்க, அவருடன் பணியாற்றும் பி.ஆர் நிறுவனங்கள் திட்டமிட்டு வேலை செய்து வருவதாகத் தெரிகிறது. தமிழக அரசியல் பற்றி அதிகம் தெரியாத வட இந்திய மக்களுக்கு, விஜய்யை ஒரு மாற்றுத் தலைவராகவும், ஊழலற்ற நிர்வாகியாகவும் காட்டும் வகையில் இந்த இணையப் பிரச்சாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவில் இருந்து ஒரு தலைவர் பிரதமராகி பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தெற்கு மாநிலங்களின் முக்கிய குரலாக விஜய்யை முன்னிறுத்த திட்டமிடப்படுகிறது.

களத்தில் இருக்கும் சவால்கள்

சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரலாவதை மட்டும் வைத்துக்கொண்டு வட மாநிலங்களில் வாக்குகளைப் பெற்றுவிட முடியாது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மற்ற மாநிலங்களில் கட்சியின் கிளையை உருவாக்குவது, கூட்டணிகளை அமைப்பது போன்ற பல சவால்கள் விஜய்க்கு முன்னால் உள்ளன.

ரீல்ஸ் மூலம் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளிவிடலாம்; ஆனால் வட இந்திய மண்ணில் ஒரு தென்னிந்தியக் கட்சி வாக்கு வங்கியை உருவாக்குவது அவ்வளவு எளிதான காரியமா? தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகள், பிற மாநிலங்களில் கட்சியின் அடிமட்டக் கட்டமைப்பு என கடக்க வேண்டிய தூரம் மலைபோல் நிற்கிறது. தேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்த நினைக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் இந்த 'பிரதமர் முன்னெடுப்பை' எப்படி அணுகும் என்பதும் கேள்விக்குறிதான்.

இருந்தாலும், தமிழகத்தைத் தாண்டி தேசிய அரசியலிலும் தடம் பதிக்க விஜய் தரப்பு இப்போதே தீவிரமாக வேலை செய்யத் தொடங்கிவிட்டது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+