CM Vijay: மழையால் பால், குடிநீர் தடைபடக் கூடாது! அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முதல்வர் விஜய், தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், சென்னை மண்டல பொறுப்பு அமைச்சர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 15 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

நேற்று இரவு கூட சென்னையில் மிக கனமழை பெய்தது. இதனால் இன்று சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் சென்னையில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
சென்னையில் நேற்று இரவு 10 செ.மீ. மழை பெய்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார். அது போல் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் யாரும் தேவையின்றி வீட்டை விட்டு வரவேண்டாம் என்றும், தண்ணீர் தேங்கிய இடங்களில் போட்டோ எடுக்கவும் வரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது எல் நினோ ஆண்டு என்பதால் அதிக அளவு மழைப் பொழிவு இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் வரும் நாட்களில் காற்றழுத்தம், மேலடுக்கு சுழற்சிகள், புயல் உள்ளிட்டவை வந்தால் தயார் நிலையில் இருப்பது குறித்த தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்துகிறார்.
இன்று தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள், சென்னை மண்டல பொறுப்பு அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
அவர்களிடம் மழைநீர் வடிகால் பணிகள், கால்வாய் சீரமைப்பு, நிவாரண முகாம்கள் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் பால், குடிநீர், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் பெய்த மழை பாதிப்பு குறித்து ரிப்பன் மாளிகை சென்ற விஜய் அங்கு ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்வர் விஜய் இன்று (18.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையில், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
முதல்வர் விஜய், பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள ரிப்பன் மாளிகை கட்டிட வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினைப் பார்வையிட்டு, நேற்று முதல் பெய்த மழை அளவு விவரங்கள், சுரங்கப்பாதைகள், கால்வாய்கள், மற்றும் ஆறுகளின் முகத்துவாரங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள், மக்கள் அளிக்கும் புகார்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த கட்டுப்பாட்டு மையத்திற்கு பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் புகார்கள் குறித்து கேட்டறிந்து, அதன் மீது உடனுக்குடன் துரித நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நேற்று பெய்த கனமழையினைத் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் இதர துறைகளைச் சேர்ந்த அலுவலர்களுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். மழை பாதிப்பு குறித்து கட்டுப்பாட்டு மையத்திற்கு வரும் புகார்களை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
அது போல் ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை மழை நிலவரம் மற்றும் பாதிப்புகள் குறித்து விசாரித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications
