இருக்கிற இடத்தில் இருக்கணும்.. காங்கிரஸை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்யும் விஜய்.. இது தேவையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2029 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிறுத்தி, தவெக தலைவர் விஜய் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் விவகாரம் தேசிய அளவில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது. தவெக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் அடுத்தடுத்து விஜய்யை பிரதமர் வேட்பாளராகப் பேசி வருவது சர்ச்சையாகி உள்ளது.

அதோடு 'மூட் ஆஃப் தி நேஷன்' கருத்துக்கணிப்பில் விஜய் பிரதமர் வேட்பாளர் ரேஸில் 3-வது இடத்தைப் பிடித்ததும் தமிழக அமைச்சரவையில் உள்ள காங்கிரஸை உச்சக்கட்ட எரிச்சலில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், இந்தக் கூச்சல்களையோ, காங்கிரஸின் மிரட்டல்களையோ துளியும் பொருட்படுத்தாமல், காங்கிரஸ் கட்சியை விஜய் தனது Left Handல் டீல் செய்து வருவது தமிழக அரசியல் களத்தில் மிக முக்கிய விவாதமாக மாறியுள்ளது.

vijay congress

கூட்டணியில் நீடிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று விஜய் நினைத்திருந்தால், மிக எளிதாக ஒரே ஒரு அறிக்கையின் மூலம் இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க முடியும். ஆனால், அவர் அதைச் செய்ய முற்றிலும் மறுத்துவிட்டார் என்பதை அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வாய்ப்பூட்டும் போடவில்லை... ராகுலையும் ஏற்கவில்லை!

ஒரு முதலமைச்சராகவும், கட்சித் தலைவராகவும் விஜய்க்கு இரண்டு வாய்ப்புகள் மிகத் தெளிவாக இருந்தன:

1. எங்களின் தேசியத் தலைவர் ராகுல் காந்திதான்.. 2029-ல் அவரே பிரதமர் வேட்பாளர் என பகிரங்கமாக அறிவித்திருக்கலாம்.

2. அல்லது, கூட்டணி தர்மத்தைக் காரணம் காட்டி, பொதுவெளியில் தன்னை பிரதமர் வேட்பாளராகப் பேசும் தவெக அமைச்சர்களுக்கு உடனடியாகக் கடுமையான வாய்ப்பூட்டு உத்தரவைப் பிறப்பித்திருக்கலாம்.

ஆனால், இந்த இரண்டையுமே செய்யாமல் விஜய் முழுமையான மௌனம் காத்து வருகிறார். தவெக தலைவர்கள் தன்னை பிரதமர் வேட்பாளராக முன்மொழிவதையும், அதற்காக வட மாநிலங்களில் நடக்கும் சமூக வலைதளப் பிரச்சாரங்களையும் அவர் தடுத்து நிறுத்தாமல், உள்ளூர ரசித்துக் கொண்டிருக்கிறார் என்றே அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன. இதை எல்லாம் செய்ய சொல்வதே அவர்தான் என்ற வேறு ஒரு கருதும் கூட உள்ளது.

காங்கிரஸின் புகார்களை 'டோன்ட் கேர்' செய்யும் அணுகுமுறை

ராகுல் காந்தியை ஏற்காவிட்டால் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம், ஆதரவை வாபஸ் பெறுவோம் என்றெல்லாம் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஊடகங்களில் கொதித்தெழுந்த பிறகும், தவெக தலைமை அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. காங்கிரஸ் தலைவர்களின் குமுறல்களுக்கு எந்தவித விளக்கமும் அளிக்காமல், அலட்சியமான அணுகுமுறையையே தவெக வெளிப்படுத்தி வருகிறது.

இதற்குப் பின்னால் தெளிவான அரசியல் எதார்த்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் இருந்த 22 கட்சிகளின் பலத்தையும், காங்கிரஸின் எதிர்ப்பையும் மீறித்தான் தனித்து 35% வாக்குகளைப் பெற்று விஜய் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துள்ளார். எனவே, காங்கிரஸின் தயவாலோ அல்லது ராகுல் காந்தியின் செல்வாக்காலோ தாங்கள் ஆட்சிக்கு வரவில்லை என்பதில் தவெக மிக உறுதியாக இருக்கிறது.

டெல்லிக்கு அனுப்பப்படும் நேரடி சிக்னல்

விஜய்யின் இந்த கள்ள மௌனமும், காங்கிரஸை எளிதாகக் கையாளும் போக்கும் டெல்லி மேலிடத்திற்கு ஒரு தெளிவான செய்தியை உணர்த்தியுள்ளது.. தமிழகத்தில் எங்களுடன் நீங்கள் இருக்கலாம்.. ஆனால் தேசிய அரசியலில் ராகுல் காந்தியின் நிபந்தனைகளுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்.

பழைய கூட்டணிக் கட்சியான திமுக, ராகுல் காந்தியை எந்தவித நிபந்தனையுமின்றி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியதைப் போல, தவெக ஒருபோதும் காங்கிரஸின் பின்னால் கைகட்டி நிற்காது என்பதை விஜய் தனது அணுகுமுறை மூலம் மிக அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.

சுய பலத்தில் ஆடும் ஆட்டம்

உ.பி., பிகார் மற்றும் தென் மாநிலங்களில் கட்சிக் கிளையைத் தொடங்குவது, 'தேசிய வெற்றி கழகம்' என பெயர் மாற்றுவது, 100 இடங்களைக் குறிவைத்து களம் இறங்குவது என விஜய்யின் தேசிய பார்வை ராகுல் காந்தியைத் தாண்டி பல படிகள் மேலே சென்றுவிட்டது.

காங்கிரஸ் மேலிடத்தின் கோபத்தையோ, உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களின் அறிக்கைகளையோ சிறிதும் பொருட்படுத்தாமல், தனக்கான தேசிய களத்தை மிகத் திட்டமிட்டு விஜய் நகர்த்தி வருவது, 2029 தேர்தல் களத்தில் காங்கிரஸுக்கு அவர் வைத்துள்ள மிகப்பெரிய செக் ஆகவே பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+