"மிஸ்டர் க்ளீன் என சொல்லி கொள்பவர்களே" ஒரு மணி நேரமா தொண்டை தண்ணீர் வற்றும் அளவுக்கு கத்திய விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு மணி நேரமாக முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கி உதயநிதி ஸ்டாலின் வரை தொண்டை கட்டும் அளவுக்கு முதல்வர் விஜய் ஒரு மணி நேரம் பேசியுள்ளார். இதை தவெகவினர் வைரலாக்கி வருகிறார்கள்.

தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் பதிலுரையில், எனது பதிலுரையை முடிப்பதற்கு முன், நான் ஒரு சின்ன வேண்டுகோள் இந்த சட்டசபையில் நான் வைக்க வேண்டும் என நினைக்கிறேன். இதுவும் கூட சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட ஒரு விஷயம்தான். அரசியல் ரீதியாக ஒருத்தருக்கு ஒருத்தர் என்ன வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம்.

CM Vijay Fiery Speech

ஆனால் அதே அரசியலுக்காக தனிப்பட்ட முறையில் நம்ம மக்களையோ இல்லை, நம் பெண்களையோ தாழ்த்தி தரம் தாழ்ந்து பேசுவது எல்லாம் வேண்டாம் என்பதற்குத்தான் இந்த வேண்டுகோள். அண்மைக்காலமாக நம் தமிழகத்தில் ஒரே ஆபாச நதியா ஓடிக்கிட்டு இருக்கு, வன்ம நதியாக ஓடிக்கிட்டு இருக்கு. நம் வீட்டில் இருக்கிற ஒரு தாயாக, அக்காவாக, தங்கையாக கூடவே இருக்கிறதும் அதே பெண்கள்தான்.

அதை மனதில் வைத்துக் கொண்டு கொஞ்சம் எல்லோரும் நல்ல முறையில் பேசினால் நன்றாக இருக்கும். எனக்கு திரைத்துறையில் மக்கள் கொடுத்திருக்கும் இடமாக இருந்தாலும் தற்போது கொடுத்திருக்கும் இடமாக இருந்தாலும் அது சாத்தியமானதற்கு காரணம் நம் வீட்டு பெண்கள்தான்.

அதனால் இந்த பெண்களை யாராவது அசிங்கமாக தரம் தாழ்ந்து பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு பெண்ணாக இருந்து இந்த சட்டசபையில் எத்தனை அவமானங்களை தாங்கிக் கொண்டிருந்தார் என்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது போன்ற அவமானங்கள் இனி வருங்காலத்தில் எந்த பெண்களுக்கும் நடந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

அரசியல் ரீதியாக என்ன வேணாலும் கமென்ட் பண்ணிக்கலாம், ஹார்ஷான கமென்ட்ஸா கூட இருக்கலாம். ஆனால் சட்டசபைக்குள்ளேயே எலும்பை உடைப்பேன் என்கிறார். இந்த பேச்செல்லாம் எதுக்கு, இதுதான் அரசியலா, இப்படியெல்லாம் பேசி பேசிதான் மக்கள் பார்த்து பார்த்து தேர்தலில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். நான் ஒன்றும் திமுகவுக்கு அட்வைஸ் செய்யவில்லை. இதுதான் ரியாலிட்டி.

திமுகவில் இருக்கும் இன்னொரு மூத்த உறுப்பினர், மக்கள் அவங்க கட்சிக்கு ஓட்டு போடாததால் அந்த மக்களுக்கெல்லாம் நல்ல சாவே வராதுனு சொல்றார். இத்தனை வருஷமா 50, 60 ஆண்டுகளாக இதே மக்கள்தான் அவர்களுக்கு ஓட்டு போட்டு இருந்தாங்க. அந்த மக்களை பார்த்து அப்படி பேச எப்படித்தான் மனசு வருது? மக்கள் தீர்ப்பை ஏற்க முடியாத மனசு எப்ப இல்லையோ, இவங்கெல்லாம் ஏன் அரசியல்ல இருக்கணும்ன்ற கேள்விதானே வரும்?

இந்த ஆபாச நதி, வன்ம நதி பேச்சுகளை இங்க பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கிற பெரியவர்கள் எல்லாம் நாங்க அந்த காலத்துல பேசாத பேச்சா அப்படினு நியாயப்படுத்துறாங்க.. ஐயா பெரியவர்களே, அந்த காலத்துல இருக்கும் அரசியல்ல இருக்கிற நல்லதை மட்டுமே எடுத்துக்குவோம்.

எதுக்கு இந்த அவதூறா, அசிங்கமா பேசுற அரசியல்.. நாங்க மிசாவை பார்த்தவங்கன்னு எல்லாத்துக்கும் மிசாவை கொண்டு வந்துவிட்டா என்ன செய்யுறது? நடந்ததை நடக்குறதை நடக்க போறதை எல்லாரும் பார்த்துட்டுதான் இருக்கிறார்கள்" என விஜய் தெரிவித்திருந்தார். இவ்வாறு 9.35 க்கு தொடங்கிய உரையை 10.35 மணி வரை ஒரு மணி நேரம் தொண்டை தண்ணீர் வற்றும் அளவுக்கு முதல்வர் விஜய் பேசியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+