தென் மாவட்டங்களில் உள்ள வீக்னஸ்.. உணர்ந்துகொண்ட விஜய்.. சமூக ஆதரவை கைப்பற்ற காய் நகர்த்தும் தவெக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் மாவட்டங்களில் தவெக அமைப்பு ரீதியாக எதிர்பார்த்த அளவிற்கு வளர்ச்சியை எட்டவில்லை என்று கட்சித் தலைமை உணர்ந்து கொண்டுள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் கணிசமாக இருக்கும் நாடார் சமூக வாக்குகளை கைப்பற்ற முதல்வர் விஜய் சில அறிவிப்புகளை வெளியிடலாம் என்று பேச்சுகள் அதிகரித்துள்ளது.

சட்டசபைத் தேர்தலில் அதிக இடங்களில் வென்று தவெக ஆட்சியை பிடித்திருந்தாலும், 8 மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தென்காசி, கன்னியாகுமரி, அரியலூர், நாகை, மயிலாடுதுறை, நீலகிரி, விழுப்புரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஒன்றில் கூட தவெக வெல்லவில்லை. அதேபோல் தென் மாவட்டங்களில் தவெக தடுமாறியது.

Vijay TVK Nadar

தூத்துக்குடியில் ஒரு தொகுதியில் மட்டுமே தவெக வென்றது. நெல்லையில் கணிசமான வெற்றியை தவெக வென்றிருந்தாலும், தற்போது முதல்வர் விஜய்யின் செயல்பாடுகள் கடுமையான பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாகவே இசக்கி சுப்பையா திடீரென ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்றுக் கொள்ளும் முடிவுக்கு வந்து சில முயற்சிகளை மேற்கொண்டதாக தெரிகிறது.

மதுரைக்கு அந்தப் பக்கம் தவெக அமைப்பு ரீதியாக வலுவாக இல்லை. தேர்தலுக்கு பின் தவெகவில் லட்சக்கணக்கானோர் இணைந்தாலும், அவர்களை ஒருங்கிணைத்து பணியாற்றும் வகையில் தவெக நிர்வாகிகள் செயல்படுவதில்லை. அதேபோல் தவெக நிர்வாகிகள் ஜூனியராக இருப்பதால், சீனியர்களை கையாள்வதில் சுணக்கம் இருந்து வருகிறது.

இதனால் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் முடிவில் தவெக தலைமை இல்லை என்று சொல்லப்படுகிறது. மாநகராட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்த பின், அதிமுக ஆட்சியை போல் சில மாதங்களுக்கு அதிகாரிகளை வைத்து பணிகளை செய்யலாம் என்ற முடிவில் விஜய் இருப்பதாக கூறப்படுகிறது. இடைத்தேர்தல் முடிவுகள் தவெகவுக்கு சாதகமாக வந்தால், விஜய் முடிவில் மாற்றம் இருக்கும் என்று தெரிகிறது.

அதேபோல் தவெக இன்னும் சமூக ரீதியான ஆதரவை பெறவில்லை. தென் மாவட்டங்களில் கணிசமாக இருக்கும் முக்குலத்தோர் மற்றும் நாடார் சமூக ஆதரவை தவெக கைப்பற்றவில்லை. நாடார் சமூக மக்களின் ஆதரவை பெறுவதற்கு கள் இறக்கத் தடையில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுவிடலாமா என்றும் தவெக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+