Jananayagan: முதல்வரே நடித்து வெளியான படம்! 50 ஆண்டுகள் கழித்து ரிலீஸ்! விஜய் வெல்வாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய் கதாநாயகனாக நடித்த படம் 50 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது. முன்னதாக எம்ஜிஆர் நடித்த படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு இந்த படம் வெற்றியை கொடுக்குமா என்பதை பார்க்கலாம்.

ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாக இருந்தது. ஆனால் திட்டமிட்டிருந்த படம், சென்சார் பிரச்சனைகளால் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து இந்த படம் சட்ட போராட்டங்களை எதிர்கொண்டு நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

jananayagan joseph Vijay

அதில் தமிழகத்தில் 1000 தியேட்டர்களிலும் இந்தியா முழுக்க 3000 தியேட்டர்களிலும் உலகமெங்கும் 8000 தியேட்டர்களிலும் வெளியாகியுள்ளது.

1977 ஆம் ஆண்டு எம்ஜிஆர் முதல்வராக பதவியேற்ற இரு மாதங்களுக்கு பிறகு, வெளியான மீனவ நண்பர் படத்தை போல் விஜய் பதவியேற்ற இரண்டு மாதங்களுக்குள் இந்த படம் தற்போது வெளியாகியுள்ளது.

எம்ஜிஆர் இயக்கி நடித்த மற்றொரு படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், அவர் பதவியேற்ற 6 மாதங்கள் கழித்து வெளியானது. எம்ஜிஆரின் பதவியேற்புக்கு முன்பே இந்த இரு படங்களின் பணிகளும் தொடங்கப்பட்டன.

ஆனால் நாடாளுமன்றத் தேர்தல்கள், சட்டசபை தேர்தல்கள் உள்ளிட்ட அரசியல் சூழலால் ஷூட்டிங் எடுப்பதிலும் படம் வெளியிடப்பட்டதிலும் கால தாமதம் ஏற்பட்டது. ஆளுநரிடம் சிறப்பு அனுமதி பெற்ற எம்ஜிஆர் 10 நாட்கள் நடித்து முடித்துக் கொடுத்தார்.

இப்போது விஜய்யும் கடந்த தேர்தலில் வென்று முதல்வராக பதவியேற்ற நிலையில் அவரது கதாபாத்திரம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்தனர். முதல்வர் பதவியில் இருக்கும் ஒருவரது படம் 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெளியாகியுள்ளதால் தவெகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

jananayagan joseph Vijay

ஏற்கெனவே விஜய் நடித்த சர்கார் உள்ளிட்ட படங்கள் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது முதல்வராகி அந்த படம் வெளியாகியுள்ள நிலையில் படம் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகம் ஏற்பட்டுள்ளது.

எம்ஜிஆர் நடிப்பில் வெளியான 2 படங்களும் அவர் முதல்வராவதற்கு முன்பே எடுக்கப்பட்டது. ஆயினும் இந்த படங்கள் 100 நாட்கள் ஓடின. தற்போதைய சூழலில் ஒரு படம் 100 நாட்கள் ஓடுவது என்பதெல்லாம் சாத்தியமில்லாத ஒன்று. எனினும் விஜய்யின் படம் வசூலில் சாதனை படைக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+