புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்!

Subscribe to Oneindia Tamil

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கட்டமைப்பை முற்றிலுமாகச் சீரமைக்கும் நோக்கில், புதிய டிஜிபி நியமிக்கப்பட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அதிரடியாகக் களமிறங்கியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் சேம்பரில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இந்த அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த 'க்ளோஸ் டோர்' (Closed-door) கூட்டமானது, புதிதாகப் பதவி ஏற்கும் அதிகாரிகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் ஒரு சாதாரண வாழ்த்துச் சந்திப்பு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைத் தன் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முதலமைச்சர் விஜய் எடுத்த மிக முக்கியமான அதிரடி நகர்வாகும்.

Vijay TVK women drugs CM Vijay DGP Meeting Mahesh Kumar Agarwal DGP Tamil Nadu Tamil Nadu Law and Order Meeting Vijay Government Police Reshuffle Women Safety Tamil Nadu Police Drug Menace Crackdown Tamil Nadu New DGP Tamil Nadu Assignments CM Vijay Secretariat Meeting Tamil Nadu Police Reforms 2026 DGP Mahesh Kumar Agarwal First Meeting

மகேஷ்குமார் அகர்வால் டிஜிபி

தமிழ்நாடு காவல்துறையின் மிக உயரிய பதவியாக விளங்கும் புதிய சட்டம் ஒழுங்கு காவல்துறை இயக்குநராக (DGP) மூத்த ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்ட நிலையில், சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10:45 மணிக்கு அவர் முறைப்படி தனது பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவர் பதவி ஏற்றுக்கொண்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே, சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாகத் தீவிரமாக விவாதிக்க முதலமைச்சர் விஜய் அவசரமாக அழைப்பு விடுத்திருந்தார். இந்த உயர்மட்டக் கூட்டத்தில் புதிய டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டி.எஸ்.அன்பு, சட்டத்துறை அமைச்சர் சிபிஆர் நிர்மல்குமார் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட தமிழக அரசின் மிக முக்கிய உயரதிகாரிகள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

அசைன்மென்ட் 1:

கடந்த சில காலங்களாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் மீதான வன்கொடுமைகள் மற்றும் குற்றங்கள் அதிகரித்து வரக்கூடிய சூழல் நிலவி வருகிறது. தங்களின் தேர்தல் வாக்குறுதிகளில் சட்டம் ஒழுங்கிற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்திருந்த தமிழக வெற்றிக்கழக அரசு, தற்போது இந்த விவகாரத்தில் அதிரடியாக களம் இறங்கியுள்ளது.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும், அவர்கள் நள்ளிரவிலும் அச்சமின்றி நடமாடும் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் புதிய டிஜிபி-க்கு முதலமைச்சர் விஜய் முதல் அசைன்மென்ட்டாக கொடுத்துள்ளார். இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பு வளையங்களை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அசைன்மென்ட் 2:

தமிழ்நாட்டில் பெரு நகரங்கள் முதல் சிறு நகரங்கள், கிராமப்புறங்கள் வரையில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களையும் இளைஞர்களையும் முற்றிலுமாகச் சீரழித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தைக் கடுமையாகக் குறைப்பது குறித்து இந்த கூட்டத்தில் மிக ஆழமாக விவாதிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் சமூக விரோதிகள் எவராக இருந்தாலும், அவர்கள் மீது எவ்விதப் பாரபட்சமும் இன்றி மிகக் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரண்டாவது முக்கிய அசைன்மென்ட் வழங்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் இல்லாத புதிய தமிழகத்தை உருவாக்குவதே இந்த அதிரடி ஆக்‌ஷன் பிளானின் முக்கிய இலக்காகும்.

அசைன்மென்ட் 3:

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தை அடிமட்ட அளவில் இருந்து மிகத் துரிதமாகச் சீரமைக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்த ஒரு மணி நேர ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் தோறும் உள்ள காவல் கண்காணிப்பாளர்களை (SP) அதிரடியாக இடமாற்றம் செய்வது மற்றும் தகுதியான அதிகாரிகளைப் புதிய எஸ்பிக்களாக மறுநியமனம் செய்வது உள்ளிட்ட பல்வேறு அதிரடி மாற்றங்கள் குறித்த ரகசியப் பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மாவட்ட அளவில் சட்டம் ஒழுங்கைக் கட்டுக்கோப்பாக வைக்கும் அதிகாரிகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என்பது இந்த அசைன்மென்ட்டின் முக்கியச் சுருக்கமாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+