வீட்டை மாற்றும் விஜய்..வெற்றி இல்லமாக மாறும் பாமணி இல்லம்? பரபரப்பாக நடக்கும் பணிகள்.. சிஎம் விசிட்?
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நீலாங்கரையில் வசித்து வரும் நிலையில், தலைமைச் செயலகத்துக்கு தினமும் வந்து செல்கிறார். ஒவ்வொரு நாளும் சுமார் 50 கிலோமீட்டர் வரை பயணிக்க வேண்டி இருக்கிறது. இந்த நிலையில் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள பாமணி இல்லத்தில் முதல்வர் விஜய் தங்க இருப்பதாகவும், அந்த இல்லத்தின் பெயரை 'பாமணி இல்லம்' என்பதிலிருந்து 'வெற்றி இல்லம்' என மாற்ற அதிகாரிகள் பரிசோதித்து வருவதாக சொல்லப்படுகிறது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முதல்வருமான விஜய் தற்போது சென்னை நீலாங்கரையில் வசித்து வருகிறார். சென்னை பட்டினப்பாக்கத்திலும் அவருக்கு ஒரு இல்லம் இருக்கிறது. இந்த நிலையில் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தினமும் தலைமைச் செயலகம் வந்து செல்கிறார் முதல்வர் விஜய்.

பெரும்பாலும் நீலாங்கரையில் இருந்து தலைமைச் செயலகம் சென்று வரும் நிலையில் ஒரு நாளைக்கு ஏறக்குறைய சுமார் 50 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய வேண்டி இருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லம் முதல்வரின் முகாம் அலுவலகம் இருந்தது.
அதற்கு முன் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது பசுமை வழிச் சாலையில் தான் தங்கியிருந்தார். மேலும் அமைச்சர்கள், செயலர்களுக்கும் அங்குதான் வீடுகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நீலாங்கரையில் இல்லத்தில் இருந்து முதல்வர் விஜய் தலைமைச் செயலகம் செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இந்த விவகாரம் முதல்வரின் கவனத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதை அடுத்து தலைமைச் செயலகத்திற்கு அருகே அதாவது பசுமைவழிச் சாலையில் முதல்வரின் முகாம் இல்லத்தை மாற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் உலாவுகிறது. முன்னரே சொன்னது போல சென்னை பட்டினப்பாக்கத்தில் முதலமைச்சர் விஜய்க்கு ஒரு வீடு இருக்கிறது. எனவே அங்கிருந்து குறைந்த தொலைவில் இருக்கும் பாமணி இல்லத்துக்கு முதல்வர் விஜய் மாறலாம் என தலைமைச் செயலக வட்டாரங்களில் தகவல்கள் உலாவுகின்றன.
இந்த இடத்தில் தான் தமிழ்நாடு முன்னாள் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவும், தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமை செயலாளரான இறையன்புவும் தங்கி இருந்தனர். இதற்கிடையே இந்த இல்லத்தை முதல்வரின் முகாம் அலுவலக மாற்ற திட்டமிடப்பட்டிருக்கிறது முதல்வர் இந்த விஜய்யும் இந்த இல்லத்தை விரைவில் பார்வையிட இருப்பதாக சொல்கின்றனர். முதல்வர் குடியேற இருக்கும் வீட்டுக்கு அருகே தான் அமைச்சர் விக்னேஷ், வினோத் உள்ளிட்டரின் வீடுகளும் அமைந்திருக்கிறது.
அது மட்டும் அல்லாமல் பூமணி என்ற இல்லத்தின் பெயரை வெற்றி இல்லம் என மாற்றவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு வருவதாகவும், அந்த இல்லத்தை புதுப்பிக்கும் பணி துரித கதியில் தொடங்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. முதல்வர் விஜய் கட்சி ஆரம்பித்தபோது அந்த கட்சியின் பெயரில் வெற்றி இருப்பது போல தமிழக வெற்றி கழகம் என அழைக்கப்பட்டது. ஆட்சி அமைத்ததற்கு பிறகும் பல்வேறு திட்டங்களில் வெற்றி என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. வெற்றி பயணத்திட்டம் என பல்வேறு திட்டங்களில் அந்த வார்த்தை இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.




Click it and Unblock the Notifications
