தமிழ்நாடு முழுக்க ஃபோர்ஸை இறக்குங்க.. உதயநிதி கைதில்.. சத்தமே இன்றி விஜய் சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தஞ்சாவூர் உரையில் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் அவரது நீலாங்கரை இல்லத்தில் வச்சுக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த அதிரடி கைதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கொந்தளித்து வீதிக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

திமுகவினரின் இந்த போராட்டங்கள் காரணமாக மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, தமிழகம் முழுவதும் அனைத்து முக்கிய நகரங்களிலும் தாலுகாக்களிலும் முன்னெச்சரிக்கையாகப் பாதுகாப்பை பலப்படுத்த முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சரின் அவசர உத்தரவும் டிஜிபி சுற்றுப்பயணமும்

உதயநிதி ஸ்டாலினின் கைது நடவடிக்கை உறுதி செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் உயர்நிலைக் காவல் அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் போன் வாயிலாக நடைபெற்றது.

CM Vijay Orders Statewide Police Deployment Following Udhayanidhi Stalin s Arrest

மாநிலத்தின் அமைதிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகத் தெரிவித்த முதல்வர், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றிச் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தலைமைச் செயலாளருக்கும், சட்டம்-ஒழுங்கு டிஜிபிக்கும் கண்டிப்பான உத்தர பிறப்பித்ததாக கூறப்டுகிறது..

இதனைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் (SP) மற்றும் மாநகரக் காவல் ஆணையர்களுக்கு (City Police Commissioners) மாநில காவல் தலைமை அலுவலகத்திலிருந்து உடனடி அவசரச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

மாவட்டங்கள் தோறும் களம் இறங்கிய பாதுகாப்புப் படைகள்

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து, தமிழகத்தின் முக்கியப் பகுதிகளான சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் காவல் துறையினர் உடனடியாகக் களமிறக்கப்பட்டனர்.

சென்னை பெருநகரம்:

தலைமைச் செயலகம், அண்ணா அறிவாலயம், மெரினா கடற்கரை, நீலாங்கரை மற்றும் முக்கியத் தலைவர்களின் இல்லங்கள் அமைந்துள்ள பகுதிகளில் சுமார் 15,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முக்கியச் சாலைகள் & சுங்கச்சாவடிகள்:

மாவட்ட எல்லைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்காலிகத் தடுப்புகள் அமைக்கப்பட்டு, சந்தேகத்திற்குரிய வாகனங்கள் மற்றும் திமுக ஆதரவாளர்களின் வாகனங்கள் தீவிர தணிக்கைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

பேருந்து நிலையங்கள் & இரயில் நிலையங்கள்

சென்னை மத்திய இரயில் நிலையம், எழும்பூர், கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையங்களில் ஆயுதம் ஏந்திய அதிரடிப் படையினர் மற்றும் தமிழ்நாடு சிறப்புப் காவல் படையினர் (TSP) ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கைது நடவடிக்கை

போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கலவரக் தடுப்பு வாகனங்கள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசும் சிறப்பு வாகனங்கள் முக்கியச் சந்திப்புகளில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

அனுமதியின்றி சாலை மறியல், மறியல் போராட்டங்கள் மற்றும் உருவப்பொம்மை எரிப்பில் ஈடுபட முயன்ற பல மாவட்டச் செயலாளர்கள் மற்றும் திமுக தொண்டர்களைக் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்து தற்காலிகக் கல்யாண மண்டபங்களில் அடைத்து வருகின்றனர்.

அரசியல் ரீதியான இந்த மோதல்கள் மற்றும் போராட்டங்கள் காரணமாகப் பொதுமக்களின் அன்றாடப் பணிகளுக்கோ, போக்குவரத்திற்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதில் காவல் துறை தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. அரசுப் பேருந்துகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் ரோந்து வாகனங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் கைதைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் லேசான பதற்றம் நிலவினாலும், முதலமைச்சர் விஜய்யின் இந்த அதிரடி பாதுகாப்பு உத்தரவால் நிலைமை முழுமையாகக் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+