அன்பில் மகேஷ் மீது இன்னொரு கேஸ்.. விஜய் போடும் பெரிய திட்டம்.. மனைவி மீதும் ஆக்சன் எடுக்க திட்டம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட் டிருக்கும் திமுக மாஜி மந்திரி அன்பில் மகேஷ் மீது, மற்றொரு வழக்கை பதிவு செய்ய திட்டமிடுகிறது தவெக அரசு.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாகச் சொல்லி 100 கோடி ரூபாய் அளவுக்கு பணம் வசூலித்து மோசடி நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், ஏற்கனவே பி.டி.அரசக்குமார் கைது செய்யப்பட்டார். இந்த மோசடி வழக்கில் சிக்கியுள்ள முத்துக்குமார் உள்ளிட்ட பலர் தலை மறைவாக இருக்கிறார்கள். அவர்களை கைது செய்வதிலும் தவெக அரசின் காவல் துறை சீரியஷாக இருக்கிறது. முத்துக்குமார், பதுங்கியுள்ள இடத்தை மாநில உளவுத்துறை மோப்பம் பிடித்து அதன் விபரங்களை முதல்வர் விஜய்யின் கவனத்துக்கு ஏற்கனவே தெரிவித்திருக்கிறது.

Anbil Mahesh vijay

இதனையடுத்து நடந்த ஆலோசனையில், இந்த மோசடிக்கு சூத்தரதாரி யாக இருந்தவர் அன்பில் மகேஷ். அவரின் விருப்பத்தின் பேரில் இந்த மோசடி நடந்திருக்கிறது. அவர் மீது சட்டரீதியாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்வரின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என காவல் துறை உயரதிகாரிகள் தரப்பிலிருந்து சொல்லப்பட்டது.

அப்போது, அவர் (அன்பில் மகேஷ்) முன் ஜாமீன்னுக்கு முயற்சித்துள்ளார். அதன் மீதான முடிவு தெரியட்டும். அதன்பிறகு முடிவு செய்யலாம் என்று சுருக்கமாக சொல்லியுள்ளார் முதல்வர் விஜய். இதனைத்தொடர்ந்து, அன்பில் மகேஷின் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பிற்காக காத்திருந்தனர். 26-ந்தேதி தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், அன்பில் மகேஷின் முன் ஜாமீன் மனு நிராகரிக் கப்பட்டதை அடுத்து, அன்பில் மகேஷை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியது போலீஸ். முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டால், கைது நடவடிக்கையை எடுக்கலாம் என 25-ந்தேதி இரவு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜுக்கு தெரிவிக்கப்பட்டது.

முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதும் கைது நடவடிக்கையில் உடன டியாக களமிறங்கிய போலீஸ், அன்பில் மகேஷை கைது செய்து புழல் சிறையில் அடைத்தது. அவரை கைது செய்து சிறையில் அழைப்பதற்குள், திமுகவினரின் எதிர்ப்புகளைப் பெருமளவில் எதிர்கொண்டனர் போலீஸார்.

இந்த நிலையில், மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அன்பில் மகேஷ் மீது அடுத்ததாக இன்னொரு வழக்கை பதிவு செய்யவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் அரசு தரப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அன்பில் மகேஷ் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக ஊழல் வழக்கை பதிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாம். விரைவில் சொத்துக்குவிப்பு வழக்கு அன்பில் மகேஷ் மீது பாயவிருக்கிறது என்கிறது உளவுத்துறை வட்டாரம்.

இதற்கிடையே, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் கொடுப்பது தொடர் பான விவகாரத்தில் புழங்கியதாக சொல்லப்படும் 420 கோடி ரூபாய் கை மாறிய சம்பவத்திற்கு நிறைய ஆதாரங்களை சேகரித்துள்ள போலீஸார், இதில் தொடர்புடைய அன்பில் மகேஷின் மனைவி மீதும் ஆக்ஷன் எடுக்க லாமா? என்று தங்களின் மேலிடத்திடம் ஆலோசனைக் கேட்டுள்ளனர். அதற்கு மேலிட அதிகாரிகள், பெண்களை கைது செய்வதில் அவசரம் காட்ட வேண்டாம்; முதல்வரின் ஆலோசனையை பெற்றுத்தான் இதில் கவனம் செலுத்த வேண்டும். அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு விட்டதால், இனி முத்துக் குமாரை கைது செய்யலாம். அவர் அப்ரூவராக மாறுவதாகவும் ஒரு தகவல் அரசுக்கு கிடைத்துள்ளது. முத்துக்குமாரை தொடர்ந்து கண்காணித்த படி இருங்கள் என்றும் போலீஸ் தரப்பில் பேசப்பட்டு வருகிறது.

தற்போது அன்பில் மகேஷை ஜாமீனில் எடுக்க திமுக தரப்பில் தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. ஜாமீன் கிடைப்பதற்குள் வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு ஊழல் வழக்கை பதிவு செய்யக் காத்திருக்கிறது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை.

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+