தனுஷ் அரசியல் வருகை.. அலர்ட் மோடில் திமுக.. இளைஞரணியை பலப்படுத்தும் பணியில் உதயநிதி ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தனுஷ் அரசியல் வருகை கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட சூழலில், திமுக முகாம் கூடுதல் அலர்ட் மோடுக்கு சென்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் இளைஞரணியை இன்னும் வலுப்படுத்தும் பணிகளை உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவிட்டதாக பேச்சுகள் அதிகரித்துள்ளது.

நடிகர் தனுஷ் தொடர்ச்சியாக நற்பணி இயக்க கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறார். ஏற்கனவே பிறந்தநாள் விழாவில் ஆட்டோ, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உள்ளிட்டவற்றை வழங்கிய தனுஷ், திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு அரசியல் ரீதியிலான சந்திப்புகளை மேற்கொண்டார். இதனால் தவெக அமைச்சர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

Dhanush DMK Udhayanithi stalin

இதன்பின் தனுஷ் மீது சில விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டது. தனுஷ் மகளிர் வாக்குகளை கைப்பற்ற முடியாது என்றெல்லாம் பேச்சுகள் எழுந்தன. இதனால் டெல்லியில் இருந்து திரும்பிய தனுஷ், உடனடியாக மகளிரணி நிர்வாகிகளை சந்தித்து அவருக்கு வெள்ளி குத்து விளக்கு பரிசாக கொடுத்தார். இதன் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் டிரெண்டாகின.

தனுஷ் செயல்பாடுகள் அவரின் அரசியல் வருகையை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 2031 சட்டசபைத் தேர்தல் வரை காத்திருக்காமல், உள்ளாட்சித் தேர்தலிலேயே தனுஷ் ஆதரவாளர்கள் களமிறங்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆளும் தரப்பு கொஞ்சம் ஆடிப் போயிருக்கிறது.

ஏனென்றால் தனுஷ்க்கு கணிசமான ஆதரவாளர்கள் இருக்கின்றனர். அதேபோல் இளைஞர்கள் மற்றும் மகளிர் வாக்குகள் பிரிந்தால், அது தவெகவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறக்கூடும். அதேபோல் திமுக இப்போதே தனுஷ் அரசியல் வருகையை கண்காணித்து வருகிறது. மீண்டும் இளைஞர்களை வேறு பக்கம் செல்லாமல் தடுக்க திமுக துரித நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது.

அதேபோல் இளைஞரணியை பலப்படுத்தும் நடவடிக்கையில் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக இறங்கி இருப்பதாக அறிவாலயத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன. விஜய்யை போல் காலம் கடந்து பிரச்சனையை உணராமல், தொடக்க நிலையிலேயே பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று திமுக தலைமை கருதி இருக்கிறது. அதனால் தனுஷ் வருகையால் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும், புதிய வாக்காளர்களை கவராமல் இருந்துவிடக் கூடாது என்பதிலும் கருத்தாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+