Arnab: நடுக்கடலில் ட்விஸ்ட்.. நகர மறுத்த ஒர்னாப் புயல்.. தாமதமாக கரையைக் கடந்ததாக வானிலை மையம் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நள்ளிரவு 1.20 மணியளவில் ஒர்னாப் (Arnab) புயலின் மைய பகுதி கரையை கடக்க தொடங்கிய நிலையில், அதிகாலை 4 மணியளவில் முழுவதுமாக மையப்பகுதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் கரையை கடக்கும் போது நகராமல் ஒரே இடத்தில் நிலை கொண்டதன் காரணமாக மேலும், 3 மணி நேரம் வரை கரையை கடக்க அர்னாப் புயல் எடுத்துக்கொண்டதாக வானிலை மையம் கணித்துள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த அர்னாப் புயல், மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற்று ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வந்தது. நள்ளிரவு 1.20 மணியளவில் புயலின் மையப் பகுதி கரையை கடக்க துவங்கியது. அதிகாலை 4 மணியளவில் முழுவதுமாக மைய பகுதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

cyclone arnab weather

புயல் கரையை கடக்கும் போது நகராமல் ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்தது. மேலும் 3 மணி நேரம் வரை கரையை கடக்க அர்னாப் புயல் எடுத்துக்கொள்ள கூடும் என வானிலை மையம் கணித்து அறிவித்தது. பபத்லா, - விசாகப்பட்டினம் இடையே ஏனாம் அருகே மிகத் தீவிரப் புயலாக, புயல் கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்தது.

ஆந்திராவில் மணிக்கு 115 முதல் 125 கி.மீ வேகத்திலும், இடையிடையே 140 கி.மீ வேகத்திலும் பலத்த சூறாவளிக் காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மோசமான வானிலை காரணமாக விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா இடையேயான விமான சேவை, ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

புயல் காரணமாக காக்கிநாடா மாவட்டத்தில் உப்படா, கோனபாபேட்டா மற்றும் முலாபேட்டா கடற்கரை கிராமங்களில் கடல்நீர் குடியிருப்புக்குள் புகுந்தது. தொடர்ந்து ஆக்ரோஷமாக எழுந்த ராட்சத அலைகளால் கரையோரம் மண் அரிப்பு ஏற்பட்டு வீடுகள் மற்றும் நாட்டு படகுகள் சேதமடைந்தன. 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

புயல் நிலவரம் குறித்து சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வதந்திகளையோ, உண்மைக்கு மாறான கணிப்புகளையோ வெளியிடக் கூடாது என ஒடிசா அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ​கடலோர மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படையினர் முழு வீச்சில் களமிறக்கப்பட்டு, நிலைமை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நரசாபூர காக்கிநாடா இடையே யானம் அருகே அதி தீவிர புயலாக 'அர்னாப்' முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடந்த சமயத்தில் மணிக்கு 125 கி.மீ. முதல் 150 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியதாகவும், தற்போது சற்று வலுவிழந்து தீவிர புயலாக மாறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "'ஒர்னாப்' புயல் மிக தீவிர புயல் என்ற நிலையில் இருந்து தீவிர புயலாக வலுவிழந்துள்ளது. இது இன்று (புதன்கிழமை) அதிகாலை 2 மணி முதல் காலை 8 மணிக்குள் நர்சாபூருக்கு கிழக்கு - வடகிழக்கே சுமார் 20 கி.மீ தொலைவிலும், ஏனத்துக்கு தென்மேற்கே 40 கி.மீ. தொலைவிலும் காக்கிநாடாவுக்கு தென்மேற்கே 60 கி.மீ. தொலைவிலும் கடற்கரையைக் கடந்தது.

புயல் கரையைக் கடந்தபோது காற்றின் வேகம் மணிக்கு 125 முதல் 135 கி.மீ. வேரை இருந்தது. அவ்வப்போது காற்றின் வேகம் மணிக்கு 150 கி.மீ. வரை அதிகரித்தது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விசாகப்பட்டினம் வானிலை ஆய்வு மைய இயக்குநர் மூர்த்தி, "புயல் மணிக்கு சுமார் 3 கி.மீ. வேகத்தில் மிக மெதுவாக நகர்ந்து வருகிறது. அதன் மையம் ஏற்கனவே கடற்கரையை கடந்துவிட்டது. தற்போது காற்றின் வேகம் மணிக்கு 125 கி.மீ. முதல் 135 கி.மீ. வரை உள்ளது. அவ்வப்போது காற்று மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் வீசுகிறது.

புயல் கடற்கரையைக் கடக்கும் நிகழ்வு மதியம் 2 மணிக்குள் புயல் முழுமையாக நிறைவடையும். புயல் கரையை முழுமையாக கடந்த பிறகு காற்றின் வேகம் படிப்படியாகக் குறையும். இன்று மாலை வரை பலத்த மழை தொடரும். அதன் பிறகு மழையின் தீவிரமும் காற்றின் வேகமும் படிப்படியாகக் குறையும். நிலப்பகுதியை கடந்த பிறகு இந்த பயல் வடக்கு - வட மேற்கு திசையில் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது." என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+