வித்யா டூ வா.சுந்தர் வரை.. ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்றோருக்கு பரிசுத்தொகை வழங்கிய முதல்வர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆசிய போட்டிகள் மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு பதக்கம் வென்றவர்களுக்கு முதல்வர் விஜய் இன்று பரிசுத்தொகை வழங்கியதோடு, போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் விருந்து வழங்கினார்.

ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து முடிந்தது. இந்த போட்டிகளில் பல்வேறு போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கணைகள் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டனர். பலரும் பதக்கங்களை குவித்தனர்.

CM Vijay

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தடகளத்தில் வித்யா ராம்ராஜ், தங்கம், வெள்ளி, வெண்கலம் என்று 3 பதக்கங்களை குவித்தார். கிரிக்கெட்டில் கமலினி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். கம்பு ஊன்றி தாண்டுதல் பிரிவில் தங்கம் பரணிகா இளங்கோவன் வெண்கலம், தடகளத்தில் அபிநயா ராஜராஜன் வெண்கலம், தடகள தொடர் ஓட்டல் விஷால் வெள்ளி, வெண்கலம் என பலரும் 19 பதக்கங்களை குவித்தனர்.

இதன்மூலம் சர்வதேச அரங்கில் தமிழக வீரர், வீராங்கணைகள் முத்திரை பதித்தர். இவர்களுக்கு முதல்வர் விஜய் சார்பில் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது போட்டிகள் முடிவடைந்து அனைவரும் தமிழகம் திரும்பிய நிலையில் இன்று சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஓட்டலில் முதல்வர் விஜய் சார்பில் பாராட்டுடன் பரிசுத்தொகை மற்றும் விருந்து வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் போட்டிகளில் பங்கேற்ற வீரர், வீராங்கணைகள் பங்கேற்றனர். பதக்கம் வென்றவர்களுக்கு முதல்வர் விஜய் பரிசுத்தொகைகளை வழங்கினார். ஆசிய போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என்று 3 பதக்கங்கள் வென்று 42 ஆண்டுகால பிடி உஷாவின் சாதனையை முறியடித்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ்க்கு ரூ.55 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

அதேபோல் தடகள வீரர் விஷாலுக்கு ரூ.80 லட்சம், கிரிக்கெட் வீராங்கனை கமலினி மற்றும் கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு தலா ரூ.75 லட்சம், தடகள வீராங்கனை பரணிகா இளங்கோவனுக்கு ரூ.60 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இதுபோல் பிற பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

மேலும் சாமர்கண்ட் நகரில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி வாகை சூடிய பிரக்ஞானந்தா, குகேஷ், திவ்யா தேஷ்முக், வைஷாலி உள்பட மற்றவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பரிசுத்தொகையை பெற்றனர்.

அதன்படி வெள்ளி பதக்கம் வென்ற குகேஷ், பிரக்ஞானந்தாவிற்கு தலா ரூ.15 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. செஸ் ஒலிம்பியாட்டில் வெண்கலம் வென்ற சவீதா ஸ்ரீ, வைஷாலிக்கு தலா ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்த விழாவில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைக்கு மட்டும் மொத்தம் ரூ.8.57 கோடி மதிப்பில் பரிசுத்தொகை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+