நாடு திரும்பியதும்.. அதிகாரிகள் சொன்ன தகவல்.. கோபத்தின் உச்சிக்கே போன விஜய்.. சொதப்பிட்டாங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்திற்கான வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றிருந்த தமிழக முதல்வர் விஜய், நேற்று சென்னை திரும்பி னார். தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி உறுதி ஏற்பு நாளாக ஒவ்வொரு வருடமும் அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, உறுதி மொழி ஏற்பு நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் தலைமைச் செயலக த்தில் செய்யப்பட்டிருந்தன.

சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்பதற்காக கோட்டைக்கு நேற்று வந்தார் விஜய். உறுதி மொழியை விஜய் வாசிக்க, அமைச்சர்கள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள் என அனைவரும் அதனை ஏற்றனர். நிகழ்சிக்கு பிறகு அரசு பணி களை கவனிக்க ஆரம்பித்தார் விஜய்.

tvk vijay london

ஒரு வாரம் சென்னையில் இல்லாததால், சில அவசர கோப்புகள் அவரது டேபிளில் இருந்தது. அதனை பார்வையிட்டதற்குப் பிறகு உயரதிகாரிகளிடம் சில முக்கிய பிரச்சனைகளைப் பற்றி ஆலோசித்தார். குறிப்பாக, புதிய தலைமை செயலகம், அன்பில் மகேஷ் ரெய்டு, மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம் உள்ளிட்டவைகள் விவாதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தலைமைச்செயலக வட்டாரங்களில் விசாரித்தபோது, ஒன்பது மீனவர் கிராமங்கள் அடங்கிய பட்டினம்பாக்கம் கடலோரப் பகுதியில், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு மீனவர் சமூகத்தினர், மீனவர் அமைப்பு கள், பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சிகள் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழல்களை அதிகாரிகள் விவரித்தனர். சென்னை மண்டலத்தில் அடங்கியுள்ள 500-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து கடந்த வாரம் நடத்திய ஆலோசனைக் கூட்டத் தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, முதல்வர் விஜய் லண்டனில் இருக்கும் போதே அவருக்கு தெரிவித்திருந்தது உளவுத்துறை. அந்த ரிப்போர்ட்டில் இருந்த விசயங்கள் குறித்து முதல்வரிடம் அதிகாரிகள் எடுத்துச் சொல்லியிருக்கி றார்கள்.

இது மட்டுமல்லாமல், பட்டினம்பாக்கத்தில் உள்ள 9 மீனவ கிராமங்களில் இருந்த தவெக கொடி கம்பங்களை உடைத்து போட்டுள்ள சம்பவங்களையும் அதிகாரிகள் விவரிக்க, அப்-செட்டாகியிருக்கிறார் முதல்வர். ஒரு நிமிடம் எதுவும் பேசாத அவர், சற்று சுதாரித்துக்கொண்டு, இதற்கு என்னதான் தீர்வு? என அவர் கேட்க, சம்மந்தப்பட்ட மீனவ கிராம மக்களை சந்தித்து நீங்கள் பேசினால் சரியாகலாம். புதிய தலைமைச் செயலகம் வருவதில் அவர்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட அடிப்படைப்பிரச்சனைகள் பாதிக்கப்படுவதாக அவர்கள் பயப்படுகிறார்கள். அதனால், அவர்களை சந்தித்து நீங்கள் பேசினாலே சரியாகிவிடும்னு தோணுகிறது. அவர்களிடம் பேசிய பிறகு ஒரு முடிவை எடுக்கலாம் என சொல்லியுள்ளனர். இதற்கு முதல்வரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

அதேசமயம், அவர்களை சந்தித்துப்பேசினால் தங்களின் எதிர்ப்பை அவர் கள் கைவிடுவார்களா? என ஆஃப் தி ரெக்கார்டாக விசாரித்து தெரிந்து கொண்டு விட்டுக்கூட, அவர்களை நீங்கள் சந்திக்கலாமா? வேண்டாமா? என முடிவு செய்யலாம் எனவும் அதிகாரிகள் சொல்ல, அதற்கு க்ரீன் சிக்னல் தந்திருக்கிறார் முதல்வர்.

இதனையடுத்து, அன்பில் மகேஷ் ரெய்டு விவகாரம் பேசப்பட்டபோது, மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் என்ன பதிவு செய்யப்பட்டிருக்கிறதை விளக்கிய அதிகாரிகள், போலீஸ் தரப்பிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ரெய்டு ரிப்போர்ட்டையும் வாசித்துள்ளனர். அதில், ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவனங்கள் குறித்த விபரங்கள் இருந்துள்ளன. அதை கவனித்த முதல்வர், கிடைத்த ஆவனங்களை வைத்து சட்டரீதியான விசாரணையை மேற்கொள்ள முடியுமா? என கேட்க, முடியும் என அதிகாரி கள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ஆமோதித்திருக்கிறார்.

அதேபோல மதுரை கும்பாபிஷேக நிகழ்வில் நடந்துள்ள குளறுபடிகள், ஆகம விதிகளின்படி நடத்தப்படாத நிகழ்வுகள், மக்களின் அவஸ்தைகள், அமைச்சர்களுக்கு எதிராக மக்களின் கோபம், பாஸ் கொடுக்கப்பட்டதில் நடந்துள்ள முறைகேடுகள் என தமக்கு தெரிவிக்கப்பட்ட பிரச்சனைகள் குறித்து அதிகாரிகளிடம் விசாரித்திருக்கிறார் முதல்வர். கும்பாபிஷேக நிகழ் வில் சம்மந்தப்பட்ட அமைச்சர்களின் செயல்பாடுகள் சரியில்லை என்கிற ரீதியில் அதிகாரிகள் சில பிரச்சனைகளை சொல்லியுள்ளனர்.

சென்னை திரும்பியதும், மேற்கண்ட பிரச்சனைகள் பற்றி சீரியஷாக முதல்வர் விசாரித்ததில் அதிகாரிகளுக்கு திருப்தி. இந்த பிரச்சனைகள் தொடர்பாக சில ஆக்சன்கள் விரைவில் தெரியும் என்று விவரிக்கிறது தலைமைச் செயலக வட்டாரம்.

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+